தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று  காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக 152 இடங்களின் முன்னிலையில் உள்ளது. அடுத்தப்படியாக அதிமுக 81 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் , கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க  நகர் , எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி , ஆயிரம் விளக்கு , அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி என 16  சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 
இந்த 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. 




திமுக கூட்டணி 152 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் திமுக மட்டுமே தனித்து 118 இடங்களில் முன்னிலையில் உள்ளது.




 


திமுக கூட்டணி 152 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் திமுக மட்டுமே தனித்து 118 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை திமுக தனித்தே தக்கவைத்துக் கொண்டுள்ளது. திமுக கூட்டணியை பொருத்தவரை 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 17 தொகுதிகளின் முன்னிலையில் உள்ளது. 6 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஐ 2 இடங்களிலும், 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4 தொகுதிகளிலும், 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 4 தொகுதிகளிலும், 6 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.