தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், கம்பைநல்லூர், கடத்தூர், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட 10 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தருமபுரி நகராட்சி உள்ளிட்ட 9 பேரூராட்சிகளில் திமுக கைப்பற்றியது. ஆனால் பேரூராட்சி மட்டும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் 7 இடங்களை பிடித்து சம பலத்துடன் இருந்து வருகிறது மேலும் இதில் இரண்டு சுயேச்சைகளும் இரண்டு பக்கமும் வெற்றி பெற்றுள்ளது.

 



திமுக கவுன்சிலர் இந்திராணி


 



இந்நிலையில் அரூர் பேரூராட்சி தலைவர் வேட்பாளராக திமுக சார்பில் முன்னாள் ஒன்றிய செயலாளர் சூர்யா தனபால் மனைவி இந்திராணியும், அதிமுக நகர செயலாளர் பாபு  மருமகள் நித்யாவும் முன் நிறுத்தப்பட்டனர். ஆனால் அரூர் பேரூராட்சியில் அதிமுகவும் திமுகவும் தலா 7 இடங்களை பிடித்து சமபலத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற, இரண்டு கட்சிகளுக்கும் இன்னும் 3 இடங்கள் தேவைப்படுகிறது. இதில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் சரிதா என்பவர் திமுகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். இதனால் திமுகவிற்கு இன்னும் இரண்டு இடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது ஆனால் அதிமுகவிற்கு 3 இடங்கள் தேவைப்படுகிறது.



 



அறிவழகன் (எ) பாபு, அதிமுக நகர செயலாளர் 


 

இதனால் இரண்டு கட்சிகளும் சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ள ஜீவா அன்பழகன் மற்றும் பாமகவை சேர்ந்த அன்புமணி மற்றும் பெருமாள் ஆகியோரின் ஆதரவை நாடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இரண்டு பிரதான கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், எளிதில் தலைவர் பதவியை கைப்பற்ற முடியவில்லை. இதற்கு சுயேட்சைகளின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் இரண்டு கட்சிகளும் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ள ஜீவா அன்பழகன் மற்றும் பாமகவினரிடம் முட்டிமோதி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ஜீவா அன்பழகன் மற்றும் பாமகவை சார்ந்தவர்கள் இருவருமே தங்களுக்கு துணைத் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என என வலியுறுத்தி வருகின்றனர்.

 

 


நிவேதா சக்தி, அதிமுக கவுன்சிலர் 


 


மேலும் திமுகவிற்கு 2 இடங்கள் மட்டுமே தேவை என்பதால் சுயேட்சையாக வெற்றிபெற்ற ஜீவா அன்பழகனை விடுத்து பாமக சேர்ந்தவர்களிடம் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஒன்பது பேரூராட்சிகளில் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ள நிலையில், அரூர் பேரூராட்சியை கைப்பற்ற வேண்டுமென்ற கட்டாயத்தில் தொடர்ந்து பாமகவினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் ஒன்பது பேரூராட்சி ஒரு நகராட்சியை இழந்துள்ள அதிமுகவினர், அரூர் பேரூராட்சியை மட்டும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற முனைப்புடன் சுயேட்சையாக வெற்றி பெற்ற ஜீவா அன்பழகன் மற்றும் பாமகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இடைவிடாமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அரூர் பேரூராட்சியில் மற்றும் தேர்தல் களம் இன்னும் பரபரப்பாகவே இருந்து வருகிறது இதில் இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதால் சுயச்சை மற்றும் பார்க்க பாமகவிற்கு அதிகப்படியான பம்பர் பரிசுகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் மறைமுக தேர்தல் நடைபெறும் நேரத்திற்கு முன்புவரை திமுக, அதிமுக அரூர் பேரூராட்சி யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு படத்திற்கும் பஞ்சமில்லாமல் இருக்கும்.