டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமான சட்டமன்ற தேர்தல் இன்று (பிப்ரவரி 5) தேர்தல் நடைபெறுகிறது. 7-மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

Continues below advertisement


டெல்லியில் பாதுகாப்பு:


டெல்லியில் 70 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 220 பாராமிலிட்ரி படையினர், 35,626 டெல்லி காவல் துறையினர், 19 ஆயிரம் Home Gurards, சிறப்பு பாதுகாப்புப் பிரிவினர் 3 ஆயிரம் பேர் என வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025 - மும்முனை போட்டி:


அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் இருக்கிறது. அதற்கேற்றவாரே டெல்லி அரசின் சாதனைகள், மக்களுக்கான அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றை விளக்கி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது. பாரதிய ஜனதா கட்சி 25 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியி, காங்கிரஸ்  கட்சி 2013 -ம் ஆண்டிற்கு முன், 15 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் டெல்லி சட்டமன்றத்தில் நுழைவதில் தீவரமாக இருக்கிறது. 2020 டெல்லி சட்டமன்ற தேர்தலில்  ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. 70 தொகுதிகளில் 8-ல் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


2013-ம் ஆம் ஆண்டு தேர்தில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் உடன் கூட்டணியில் ஆட்சி அமைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சரானார். 2015-ல் நடைபெற்ற தேர்தலில் 67 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸின் 15 ஆண்டுக்கால ஆட்சியை ஆம் ஆத்மி கட்சி பெற்றது. இரண்டவாது முறையாக பெரும் வெற்றி பெற்றது. 2020-ல் நடைபெற்ற தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.


மின்சார மானியம், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம், காற்று மாசுபாடுக்கு தீர்வுக்கான திட்டங்கள் என டெல்லி மாடல் என்பதை ஆம் ஆத்மி மக்களிடம் அறிமுகம் செய்தது. இவை அவர்களுக்கு உதவவும் செய்தன. ‘டெல்லி மாடல்’ தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்த டெல்லி மாடல் திட்டங்கள் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெற்றது. 


'டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்' , ஆம் ஆத்மி கட்சியில் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் ஆகிய முக்கிய தலைவர்களின் கைது உள்ளிட்ட விசயங்கள் தேர்தலில் எதிரொலிக்கலாம்  என கருதப்படுகிறது.


1990-களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு காங்கிரஸ் கட்சி டெல்லி தேர்தலில் வெற்றி பெறவில்லை. பா.ஜ.க. 1998-க்குப் பிறகு டெல்லியில் வெற்றி பெறவில்லை. 26 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெறும் முனைப்புடன் தீவிரமான வேலை செய்தது. 


காங்கிரஸ், பா.ஜ.க. கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் பற்றி அறிவிக்கவில்லை. ஆம் ஆத்மியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 


வாக்காளர்கள் விவரம்:


ஆண் வாக்களர்கள் - 83.49 லட்சம்
பெண் வாக்களர்கள் - 71.74 லட்சம்
மொத்த வாக்காளர்கள் -1.55 கோடி