“ஆட்சிக்கு வந்தால் வீடு வீடாகச் சென்று இந்துக்களை இஸ்லாத்திற்கு மாறுமாறு அழைப்பு விடுப்பார்கள் என பதிவிட்டு, ஒரு வீடியோவானது  சமூக வலைதளங்களில் வீடியோவானது வைரலாகி வருகிறது. 


வைரல் வீடியோ:


7 நிமிடங்கள் கொண்ட வீடியோவில் வீடியோவில், ஒருவர் இந்துக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவதை காண முடிகிறது.  மேலும் இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறும் கூறுவதை கேட்க முடிகிறது. இந்நிலையில் வைரலான வீடியோ குறித்து உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்ததில், 2021 ஆம் ஆண்டிற்கு முந்தையது என்றும் வங்கதேசத்தில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோவானது, இந்தியாவோடோ அல்லது காங்கிரஸ் கட்சியோடு தொடர்புடையது அல்ல என்பதை கண்டறிய முடிகிறது.  


உண்மை என்ன?


இது சமூக ஊடகப் பதிவுகளில் தவறான கருத்துடன் பகிரப்படுகிறது என்பதையும் கண்டறியப்படுகிறது.  அந்த வீடியோவில் இருக்கும் நபர் டாக்டர் சையத் இர்ஷாத் புகாரி என்பவர் என்றும், 7 நிமிட வீடியோவில், இந்துத்துவா தலைவர் யதி நரசிங்கானந்த் சரஸ்வதியின் முகமது நபிக்கு எதிரான அறிக்கைகளுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பதையும் காண முடிகிறது.  இந்த அசல் வீடியோவில் புகாரி நரசிங்கானந்தை விமர்சித்து, இஸ்லாமிற்கு மாறுமாறு சவால் விடுகிறார். கீழே உள்ள வீடியோவில், புக்காரி இந்தியாவைப் பற்றியோ அல்லது காங்கிரஸ் கட்சியைப் பற்றியோ பேசவில்லை.



தவறான தகவல்:


இது வங்காள தேச நாட்டைச் சேர்ந்தது என அறிய முடிகிறது. எனவே, இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளபடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வீடு வீடாக சென்று இந்து மதத்தினரை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பது பொய்யான தகவலாகும். எனவே இந்த வைரல் வீடியோவை யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக BOOM என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.