வெற்றி தோல்வியை விட, அதிகம் பேசப்படும் விசயம், அதிமுகவை பின்னுங்குத் தள்ளி பாஜக பல இடங்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது என்பது தான் அது. தோல்வி என்கிற பொதுவான விசயத்தை விட, யார் இரண்டாவது இடம் என்கிற போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் பாஜக எத்தனை இடங்களில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது என்கிற புள்ளி விபரங்கள் இப்போது தான் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கும் முன், கோவையில் கோலோச்சும் கட்சிகளாக தங்களை முன்னிறுத்திக்கொள்ளும், அதிமுக-பாஜகவும் தனித்தனியாக போட்டியிட்டதில், எத்தனை வார்டுகளில் அதிமுகவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது பாஜக? மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் எடுக்கப்பட்ட புள்ளி விபரம் இதோ:

அதிமுகவை விட, பாஜக வேட்பாளர்கள் கோவை மாநகராட்சியில் அதிக வாக்குகள் பெற்ற வார்டுகள் இதோ:

வார்டு எண் -2

வெற்றி: திமுக-5125

அதிமுக-897

பாஜக- 2368

வார்டு எண்- 11

வெற்றி: திமுக-5391

அதிமுக-744

பாஜக- 1364

வார்டு எண் -14

வெற்றி: மதிமுக-1678

அதிமுக-724

பாஜக-737

வார்டு எண் -17

வெற்றி- திமுக-4899

அதிமுக-614

பாஜக-1386

 

மொத்தம் 4 வார்டுகளில் மட்டுமே பாஜக , அதிமுகவை விட அதிக ஓட்டுகள் பெற்றிருக்கிறது. மற்ற இடங்களில் அதிமுகவே இரண்டாவது பெரிய கட்சியாக அதிக வாக்குகளை பெற்றுள்ளது. அதே நேரத்தில் சுமார் 15 வார்டுகளில் அதிமுக-பாஜக பெற்ற வாக்குகள், வெற்றிக்கான வாக்குகளாக உள்ளன. மேலும் சில வார்டுகளில் வெற்றிக்கு தேவையான ஓட்டுகளை நெருங்கும் நிலையில் உள்ளது. அந்த வகையில்  பாஜக-அதிமுக கூட்டணி இல்லாமல், 20 வார்டுகளுக்கு மேல் அக்கட்சிகள் தோல்வியை கண்டுள்ளன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண