பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் சமூகநீதிக்கு சவக்குழிதான் என விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 


தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், விழுப்புரத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


வாக்கு சேகரிப்பு:


அப்போது பேசிய முதலமைச்சர், திருமாவளவன் ஆதரவு பெற்ற வேட்பாளர் ரவிக்குமார், எழுத்தாளர் , பத்திரிக்கையாளர், களப்போராளி, பன்முக திறமை கொண்ட வேட்பாளராக சிறப்பாக செயல்படுகிற அவருக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுவதாகவும், கடலூரில் போட்டியிடும் விஷ்னு பிரசாந்த்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுவதாகவும், தமிழ்நாட்டின் குரலாக ஒலிக்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார். 




 வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது விடுதலை போராட்டம். நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளது.பட்டியலின பழங்குடியினருக்கு ஆபத்து வந்துள்ளது. நாட்டை நிர்வகிக்கும் செயலாளர்களில் மூன்று சதவிகிதம் பேர் கூட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இல்லை.


சமூக நீதி:


கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளாக படித்து முன்னேறி வருகிறோம் என்றால் போராடி பெற்ற சமூக நீதி தான் காரணம். முழுமையாக கிடைக்காததற்கு காரணம் பாஜக. 


மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது. சமூக நீதியை சவக்குழி தோண்டி புதைத்து விடுவார்கள் என்பதால் தான் பாஜகவை எதிர்க்கிறோம். 


 தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இருக்க காரணம் கருணாநிதி . சமூக நீதிக்காக கூட்டணி அமைத்து இந்தியா முழுவதும் பேச வைத்துள்ளோம். இந்தியா கூட்டணி அமைப்பு அமைந்ததும் சாதி வாரியாக நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று எஸ்.சி,எஸ்.டி உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


இந்தியா முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வளர்ச்சி பாதையில் செல்வதற்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.


சமூக நீதியை நிலைநாட்ட நடைபெறும் தேர்தல் மத இன மொழி சாதி அடிப்படையில் பிரித்து தமிழ்நாட்டிற்கு வஞ்சித்தது பாஜக அரசு. பாஜக எத்தனை முறை தமிழ்நாட்டில் படையெடுத்து வந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது. 


Also Read: Power Pages 8: தோல்வியே காணாத கலைஞரின் அரசியல் பயணம்! எம்.ஜி.ஆர் ஆதரவு முதல் எதிர்ப்பு வரை!


சந்தர்ப்பவாத கூட்டணி:




சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜகவுடன் ராமதாஸ் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். பாஜகவிற்கு மதிப்பு எவ்வளவு கொடுப்பீர்கள் என ராமதாசிடம் கேட்டபோது பூஜ்யத்திற்கு கீழே கொடுப்பேன் என ராமதாஸ் தெரிவித்தார். ஆனால், அவருடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். யாமரிய பராபரனே என்று சந்தர்ப்பவாத கூட்டணியை ராமதாஸ் வைத்துள்ளார் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


இபிஎஸ் தலைமையிலான அஇஅதிமுக-வின் ஆட்சி தமிழ்நாட்டின் இருண்ட காலம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரையில் பேசினார்.


திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் சமூகநீதி என்பது உயிர்மூச்சான கொள்கை! அதனால்தான், ஒரு கொள்கைக் கூட்டணியை அமைத்து, அதனுடைய வெற்றிக்காக இங்கு மேடையில் இருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்க வந்திருக்கிறேன். அமையவுள்ள இந்தியா கூட்டணி அரசு, நிச்சயம் சமூகநீதி அரசாக இருக்கும்! அந்த அரசில் நாங்கள் நிறைவேற்றப்போகும் சாதனைகளைத் தேர்தல் அறிக்கையாகக் கொடுத்திருக்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.