திமுக வேட்பாளர்கள் சிலர் தலைமையின் முடிவிற்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றது தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் திமுக 21 மாநகராட்சியில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் இம்மாதம் 2ஆம் தேதி பதவியேற்றனர். இன்று நகர்ப்புற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றின் மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 


மேயர், தலைவர் உள்ளிட்ட பதவிகளை திமுக ஒரு சில இடங்களில் தன்னுடைய கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் அந்த இடங்களில் திமுக வேட்பாளர்கள் சிலர் தலைமையின் முடிவிற்கு எதிராக போட்டியிட்டு வெற்று பெற்றுள்ளனர். இந்தச் சூழலில் கட்சி தலைமையின் முடிவை எதிர்த்து போட்டியிட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை செய்து வருகிறார். 


இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்'  காத்திட வேண்டுமென முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண