தாம்பரம் மாநகராட்சி, 44வது வார்டுக்கு உட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பதற்காக சிட்லபாக்கம் மண்டல துணை தலைவர் பழனி (46), கலைமகள் தெரு, குப்புசாமி நகர் பகுதிக்கு சென்றிருந்தார்.  அப்போது 44 வது வார்டு திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவர் குடிபோதையில் கார்த்திக் என்பவர் பழனியிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுடைய பகுதியில் வாக்கு கேட்டு வரக்கூடாது என சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 5 லட்சம் மோசடி செய்த தபால் ஊழியர் கைது


 





 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | பொய் சொல்வதில் மு.க.ஸ்டாலின் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் - ஈபிஎஸ் பேச்சு

 

காத்திக் உடன் பாரதிய ஜனதா மண்டல துணைத் தலைவர் பழனி தமிழகத்தில் எங்கு வேண்டுமென்றாலும் பிரச்சாரம் செய்ய உரிமை உள்ளது என பழனியும் தொடர்ந்து சண்டையிட்டு உள்ளார். தொடர்ந்து நடைபெற்ற வாக்குவாதம் முற்றியதால், கோபமடைந்த கார்த்திக் பாஜக பிரமுகரிடம் தகராறில் ஈடுபட்டு செங்கலை எடுத்து அடித்து மண்டையை உடைந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த பாஜக பிரமுகர் தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று அங்கு அவருக்கு 6 தையல் போடப்பட்டது. 

 



 


 

பின்னர் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் திமுக பிரமுகர் கார்த்திக் கைது செய்யப்பட்டு அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.