சென்னை திமுக மேயர் வேட்பாளர் பிரியா ராஜாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ன விவரம் வெளியாகியுள்ளது.
திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜா சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் வட சென்னை பகுதியான திருவிக நகரில் இருக்கும் 74வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிரியா ராஜா 28 வயதான எம்.காம். பட்டதாரி ஆவார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி இவர்.
தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோரை அடுத்து சென்னையின் 3ஆவது பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இவர் வட சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர், முதல் தலித் பெண் மேயர்.
இதற்கு முன்பு தென் சென்னையைச் சேர்ந்தவர்களே திமுக சார்பில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வட சென்னையைச் சேர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், பிரியா ராஜனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ன விவரம் வெளியாகியுள்ளது. பிரியா ராஜனிடம் 8 லட்சத்து 24 ஆயிரத்து 941 ரூபாய் (ரூ.8,24,941) மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.
அசையா சொத்துகளோ, சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்துகளோ அவரிடம் இல்லை. இதன்படி சென்னை மேயர் வேட்பாளரிடம் மொத்தமாக 8 லட்சத்து 24 ஆயிரத்து 941 ரூபாய் (ரூ.8,24,941) சொத்து உள்ளது.
கணவர் ராஜாவிடம் ரூ.3,80,179 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. அசையா சொத்துகள் எதுவும் அவரிடம் இல்லை. சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்தின் விலை மதிப்பு ரூ.67,500 ஆக உள்ளது. சுய சம்பாத்திய சொத்து மொத்த மதிப்பு ரூ.1,25,000 ஆக உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.5,05,179 ஆக உள்ளது.
மாநகராட்சித் தேர்தல் வேட்பாளர் வேட்புமனுத் தாக்குதலின்போது உறுதிமொழி ஆவணத்தில் அவர் தாக்கல் செய்துள்ள விவரங்களின்படி, இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.