சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 7 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 21வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜசேகர் வெற்றி பெற்றுள்ளார். 182வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.கே.சதீஷ் வெற்றி பெற்றுள்ளார். 157வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் உஷாராணி 477 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். 196வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அஸ்வினி கருணா வெற்றி பெற்றுள்ளார். 197வது வார்டிலும் அ.தி.மு.க. வேட்பாளர் மேனகா வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.