பனைமர தொழிலை பாதுகாக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இடைக்கழிநாடு பேரூராட்சியில்  வடிவேல் என்பவர் வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.


 செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில்  இடைக்கழிநாடு பேரூராட்சி அமைந்துள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதுமே பனை, தென்னை, முந்திரி உள்ளிட்ட மரப் பயிர்கள் அதிக அளவில் காணப்படுகிறது இப்பகுதியில் பனைத் தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர்.  




குறிப்பாக இப்பகுதியில் செயல்பட்டுவந்த கூட்டுறவு பதநீர்  சாலை தற்போது செயல்படாமல் முடங்கியுள்ளது இப்பகுதியில் உள்ள மரப்பயிர் களையும் பனைத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறது இதன் ஒரு பகுதியாக தற்போது நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளரும் பனைத்தொழில்  செய்துவரும் டி.கே.முத்து போட்டியிடுகிறார்.   இச்சூழ்நிலையில் பனை தொழிலை பாதுகாக்க வலியுறுத்தும் விதமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வேட்பாளர் டி.கே.முத்து  மரமேறும் தொழிலாளியாகவே சென்று  வேட்பு மனு தாக்கல்  செய்தார்.


கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வாசுதேவன் க.புருஷோத்தமன் வட்டச்செயலாளர் எஸ்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி,  ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.




முன்னதாக ஏணியோடு வேட்பு மனு தாக்கல் செய்ய அவர் வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிறிது நேரம் திகைத்து போயினர். பின்னர் அவர் வேட்பாளர் மனுத்தாக்கலுக்கு வந்துள்ளார் என்றதும் ,உள்ளே விட்டனர். ஏணியை விட்டுச் செல்லுமாறு போலீசார் வைத்த கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. அத்தனை கூட்ட நெரிசலையும் கடந்து, ஏணியோடு சென்று அவர் மனுத்தாக்கல் செய்தார். 


மனுத்தாக்கலுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தையும் பனைமரம் ஏறும் போது பயன்படுத்தப்படும் குடுவையில் வைத்துக் கொண்டார். தேர்தல் அலுவலர் கேட்க, ஒவ்வொன்றாக அந்த குடுவையில் இருந்து அவர் எடுத்துக் கொடுத்தார். வழக்கமாக அந்த குடுவையில், அரிவாள் தான் இருக்கும். இன்று அந்த இடத்தில் ஆவணங்கள் இருந்தன. இதனால் தேர்தல் அலுவலகம் அடிக்கடி அதிர்ச்சியோடு திரும்ப திரும்ப பார்த்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண