கையில் மையை காண்பித்தால், 10 சதவீத தள்ளுபடியுடன் பிரியாணி ஆர்வமுடன் காத்திருந்து பிரியாணியை வாங்கிச் சென்ற பொதுமக்கள் 
 

100 சதவீத வாக்குப்பதிவு

 
மக்களவைத் தேர்தல் நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு மேற்கொள்வதற்கு, பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்கு அளித்து விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம்  மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில்  சாப்பிட செல்லும்போது காண்பித்தால் 5% விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதை வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி விலை

இந்தநிலையில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் பல்வேறு உணவகங்களில் 5 சதவீத தள்ளுபடி விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பிரியாணி கடையில் அரசு கூறிய ஐந்து சதவீதம் மற்றும் கூடுதலாக ஐந்து சதவீதம் சேர்த்து 10 சதவீத தள்ளுபடி விலையில் பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது . பொதுமக்களும் ஆர்வமுடன் தங்களது கையில் உள்ள மையை காண்பித்து 10% தள்ளுபடி விலையில் உணவுகளை வாங்கி செல்கின்றனர்.
 

கடந்த 4 மக்களவைத் தேர்தல்கள்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த 4 மக்களவைத் தேர்தலில் எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை கீழே காணலாம்.

எண்         தொகுதி    2009   2014     2019    2024
1. திருவள்ளூர்   70.57   73.67     72.33   71.87
2. சென்னை (வ)   64.91   64.01     64.23   69.26
3. தென்சென்னை   62.66    60.44     57.05   67.35
4. ஸ்ரீபெரும்புதூர்    66.1   66.1     62.43   69.79
5.  காஞ்சிபுரம்    74.22   76.33    75.28    72.99
6.  அரக்கோணம்    77.82   77.74    78.54    73.92
7. மத்திய சென்னை   61.03 61.39   58.95 67.35
8. வேலூர்  71.69 74.31   71.32   73.04
9. கிருஷ்ணகிரி 74.16 77.49 75.89  72.96
10. தருமபுரி 72.75 81.18  82.33  75.44
11. தி.மலை 79.86 78.98 78.14  73.35
12. ஆரணி  76.92 80.06 78.94  73.77
13. விழுப்புரம்  74.56 77.01 74.56  73.49
14. கள்ளக்குறிச்சி  77.28 78.41 78.77  75.67
15. சேலம்  76.42 76.8 77.86   73.55
16. நாமக்கல்   78.69  79.73 80.2   74.29
17. ஈரோடு   75.98   76.39  73.03   71.42
18. திருப்பூர் 74.64   76.38  73.17   72.02
19. நீலகிரி  70.75   73.55   73.99    71.07
20. கோவை   70.81   68.4   63.86   71.17
21. பொள்ளாச்சி   75.8   73.31   71.15   72.22
22. திண்டுக்கல்   75.58   77.38   75.24   71.37
23. கரூர்   81.43   80.65   79.23   74.46
24. திருச்சி   67.33   71.28   69.46   71.2
25. பெரம்பலூர்   79.33   80.25   79.23    74.46
26. கடலூர்   76.04   78.94   76.48    72.4
27. சிதம்பரம்   77.18   79.7     77.91    74.87
28.  மயிலாடுதுறை  73.25   76.03  73.9   71.45
29.  நாகை  77.71   77.86  76.88   72.21
30.  தஞ்சை  76.63   75.57    72.5   69.82
31.  சிவகங்கை   70.98   72.25    69.87   71.05
32.   மதுரை   77.43   67.74   66.02   68.98
33.   தேனி   74.47   74.7   75.17   71.74
34.   விருதுநகர்   77.38   74.91 72.41   72.21
35.   ராமநாதபுரம்   68.63   68.77  68.35   71.05
36.   தூத்துக்குடி   69.13   69.97  69.43   70.93
37. தென்காசி   70.18   73.96  71.37   71.06
38.  நெல்லை   66.13   67.77  67.21  70.46
39.  கன்னியாகுமரி  64.99   67.53  69.83   70.15
40.  பாண்டிச்சேரி 79.81 82.1 81.24  
  தமிழ்நாடு 73.02 73.74 72.47 72.09