கரூரில் முன்னாள் அமைச்சர்களுடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தங்கவேல், 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.


 




 


தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 


 


 




 


இதையொட்டி, தாந்தோணிமலை பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர். அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்ற வேட்பாளர் தங்கவேல், கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


 


 




 


 


அப்போது செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் தங்கவேல்,  கரூர் தொகுதி மக்களிடம் எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.