கரூர் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோதூர் ரோடு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


 


 




 


தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில் அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.


 


 




 


இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோதூர் மற்றும் கோதுர் ரோடு பகுதிகளில் திறந்த வாகனத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேட்பாளர் தங்கவேலுடன் தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.


 


 




 


நிகழ்ச்சியில் வேட்பாளர் தங்கவேல் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரவேற்க அப்பகுதி பொதுமக்கள் ஆலாத்தி தட்டுடன் நீண்ட வரிசையில் நின்று வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ”அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு பயனுள்ள திட்டங்கள் தற்போது திமுக ஆட்சியில் மூன்று விழா கண்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் கரூரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தலைவிரித்து ஆடுகிறது. இளைய தலைமுறையை காப்பாற்ற மீண்டும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்” என முன்னாள் அமைச்சர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.