மக்களவைத் தேர்தலில் களம் காணும் அதிமுக, தனது முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது. முதற்கட்டமாக வெளியிடப்பட்ட 21 பேரில் 15 பேர் அறிமுக வேட்பாளர்கள் ஆவர்.


நாடே மிகவும் எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டி மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. முதல்கட்டமாக திமுக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.


முக்கால்வாசிப் பேர் புதுமுகங்கள்


இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாமக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவில் இணைந்தது. பெரிய கட்சிகள் எதுவும் அதிமுக கூட்டணியில் இல்லாத நிலையிலும், வேட்பாளர்கள் பட்டியலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் முக்கால்வாசிப் பேர் புதுமுகங்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


வேட்பாளர்கள் யார் யார்?



  • வட சென்னை - இராயபுரம் மனோ

  • தென் சென்னை - ஜெயவர்தன்

  • மதுரை - சரவணன்

  • காஞ்சிபுரம் - ராஜசேகர்

  • அரக்கோணம் - விஜயன்

  • விழுப்புரம் - பாக்கியராஜ்

  • சிதம்பரம் - சந்திரஹாசன்

  • நாமக்கல் - தமிழ்மணி

  • கரூர் - கே.ஆர்.என். தங்கவேல்

  • சேலம் - விக்னேஷ்

  • தேனி - நாராயணசாமி

  • கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்

  • ஆரணி - கஜேந்திரன்

  • நாகப்பட்டணம் - சுர்ஜித் சங்கர்

  • ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்

  • ராமநாதபுரம் – ஜெயபெருமாள்


இந்த நிலையில், வட சென்னை தொகுதியில் ராயபுரம் மனோ, தென் சென்னை தொகுதியில் ஜெயவர்தன், மதுரை தொகுதியில் சரவணன், நாமக்கல் தொகுதியில் தமிழ்மணி ஆகியோரைத் தவிர பிறர் அனைவருமே புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ள நகர்வு


திமுக கூட்டணியில் கூட்டணி ஒதுக்கீடு, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை முன்கூட்டியே நடந்துவிட்டது. வலிமையான கூட்டணியாக திமுக திகழ்ந்து வரும் நிலையில், அதிமுக புதுமுக வேட்பாளர்களை அதிகமாக அறிமுகம் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தேர்தல் களத்தில் எதுவும் எந்த நேரத்திலும் மாறலாம்.


இதற்கிடையே தற்போது தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக, தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.