PM Modi TN Visit: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றிபெற்றே ஆக வேண்டும், என்ற இலக்குடன் பிரதமர் மொடி மற்றும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.


பிரதமர் மோடி தமிழக பயணம்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வட மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி வலுவாக இருந்தாலும், தென்மாநிலங்களில் பாஜக சற்று பலவீனமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக நடப்பாண்டு தேர்தலில் தென்மாநிலங்களில் கணிசமான வெற்றியை பெற பாஜக மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் வெற்றிக் கணக்கை தொடங்க அதிக ஆர்வம் காட்டுகிறது. இதனை பறைசாற்றும் விதமாகவே, அண்மைக்காலங்களாகவே பிரதமர் மோடி அதிகளவில் தென் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.


கோவை , சேலத்தில் பரப்புரை:


நடப்பாண்டில் ஏற்கனவே பிரதமர் மோடி தமிழகத்திற்கு 5 முறை வருகை தந்துள்ளார். இந்நிலையில், தேர்தல் தேதி அறிவித்த பிறகு முதன்முறையாக இன்று பிரதமர் தமிழகம் வருகிறார். அதன்படி, அவர் இன்று கோவையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். நாளை சேலத்தில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.


பிரதமரின் கோவை பயண விவரம்:



  • சிவமொக்காவில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைகிறார்

  • அங்கிருந்து சாலை மார்க்கமாக 2.5 கிமீ தூரத்திற்கு வாகன பேரணி மேற்கொள்கிறார்

  • ஆர்.எஸ்.புரத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

  • பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்கும் பிரதமர் தங்குகிறார்

  • இரவில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்புள்ளது

  • தொடர்ந்து நாளை காலை விமானம் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார்


சேலம் பயண விவரம்:



  • பாலக்காட்டில் நடைபெறும் பங்கேற்ற பிறகு, மீண்டும் பிறபகலில் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தடைகிறார்

  • கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

  • கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.






மோடி போட்ட டிவீட்:


தென்மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் சூழலில், பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் இன்று ஜக்தியால் மற்றும் சிவமொக்காவில் நடைபெறும் பேரணிகளில் பேசுகிறேன். பின்னர் மாலையில் கோவையில் நடைபெறும் சாலைக் ரோட்ஷோவில் கலந்து கொள்கிறேன். தெலங்கானா, கர்நாடகா அல்லது தமிழ்நாடு என எதுவாக இருந்தாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விதிவிலக்கான ஆதரவளிப்பது உற்சாகமாக உள்ளது” என மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.