அதிமுக தேர்தல் அறிக்கைகளை நடமாடும் கண்காட்சி மூலம் வீதி, வீதியாக சென்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பிரச்சாரம்.
வி.விராஜன் செல்லப்பா பிரச்சாரம் செய்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் பல்வேறு தேர்தல் அறிக்கைகளை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில், தேர்தல் அறிக்கையான ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்தாயிரம் ரூபாய் தொகை, விலையில்லாமல் குளிர்சாதன பெட்டி, ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பல்வேறு சலுகைகள் உள்ளிட்ட தேர்தல் அறிக்கைகள நடமாடும் வாகனம் மூலம் நவீன முறையில் படங்களைக் கொண்ட கண்காட்சி மூலம் வீதி, வீதியாக சென்று திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் வி.விராஜன் செல்லப்பா பிரச்சாரம் செய்தார். அந்த வாகனத்தில் நின்று ராஜன் செல்லப்பா பேசியதாவது..," கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் இன்றைக்கு 292 தேர்தல் அறிக்கைகளை அறிவித்துள்ளார். இந்த தேர்தல் அறிக்கை ஒவ்வொரு மக்களின் வளர்ச்சிக்கும் முக்கியமானதாக இருக்கும். இன்றைக்கு இந்த கண்காட்சியில் பல்வேறு புகைப்படங்களை வைத்துள்ளோம். அதில் திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இன்னல்களைப் போக்க ஆட்சிக்கு வந்தவுடன் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். அதேபோல குலவிளக்கு திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும்.
குடும்பங்களுக்கும் குளிர்சாதனப்பெட்டி வழங்கப்படும்.
மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் குளிர்சாதனப்பெட்டி வழங்கப்படும். பெண்களைப் போன்று ஆண்களுக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம். அதேபோல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். அதேபோல ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர் இழக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் அதேபோல படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் ஆன்லைன் பதிவு முறை ரத்து செய்யப்பட்டு ஏற்கனவே பழைய நடைமுறையை பின்பற்றப்படும். அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அரசின் சார்பில் மானியமா அஞ்சு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த கண்காட்சிகளில் இதுபோன்று மக்களுக்கு வைக்கப்பட்டுள்ளது ஆகவே வாக்காள பெருமக்கள் ஆகிய நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். இந்த பிரச்சாரத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர். ராஜ்சத்யன், அமமுகவை சேர்ந்த டேவிட் அண்ணாதுரை, தமாகவை சேர்ந்த கே எஸ் கே ஆர் ராஜேந்திரன் ,பகுதி செயலாளர் செல்வகுமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கோட்டைக்காளை, பார்த்திபன், வட்டக் கழக செயலாளர் மகாராஜன் மற்றும் பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
