Kangana Ranaut: பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிடுவதாக,பாஜக 5 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தெரிவித்தது.


பாஜக 5வது பட்டியல்:


18ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 5வது பட்டியல் வெளியாகியது.


மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி  ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


மக்களவை தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 2 மற்றும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 


இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் 5ஆம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.


 






அதில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


மேலும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சம்பல்பூரில் போட்டியிடுகிறார். கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யா, விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இவர் மேற்கு வங்காளத்தின் தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். அபிஜித்-க்கும் மேற்கு வங்க அரசாங்கத்துக்கும் மிகப்பெரிய மோதல் எழுந்ததையடுத்து, அரசியலில் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் நீதிபதியாக ஓய்வு பெற்று அரசியலில் நுழைந்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.


Also Read: Power Pages-5: பிறந்த இடத்தில் தோல்வி; 3 முறை பிரதமர்; 2 முறை ஆட்சி கவிழ்ப்பு: தெரியுமா வாஜ்பாய் வரலாறு