இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டமாக 40 தொகுதிகளில் வருகின்ற 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. 


தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என ஒவ்வொரு கட்சியும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், மக்கள் ஆய்வு அமைப்பின் இயக்குனர் ராஜநாயகம், தமிழ்நாட்டை பொறுத்தவரை எந்த கட்சி அதிக வாக்குகளை பெறும் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சென்னை  பத்திரியாளர் மன்றத்தில் நேற்று வெளியிட்டார். 


இந்த கருத்துக்கணிப்பு கடந்த மாதம் 25ம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 1ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 4, 485 வாக்காளர்களிடம் யாருக்கு இந்த முறை உங்களது ஓட்டு என்று கேட்டப்பட்டது. அதில், திமுகவின் கூட்டணி கட்சிகளே அதிக வாக்கு சதவீதம் என்று வெளியானது.  


வாக்கு சதவீதம்: 


மக்களவை தேர்தலில் தற்போதைய சூழ்நிலையை பொறுத்தவரை வாக்காளர்கள் பெரும்பாலும் திமுகவின் கூட்டணி கட்சிக்கே 41.3 சதவீதம் வாக்களிக்க விரும்புகின்றனர். அதனை தொடர்ந்து, அதிமுக கூட்டணிக்கு 24.2 சதவீதம் பேரும், பாஜகவிற்கு 17.1 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 12.8 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு 2.24 சதவீதம் பேரும் பிற கட்சிகள் மற்றும் நோட்டாவுக்கு 24.6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 


தொகுதிவாரியாக எத்தனை..? 


மக்களவை தொகுதி வாரியாக பார்க்கும்போது, பிரச்சாரத்தின் அடிப்படையிலும், நிற்க வைக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு திமுக கூட்டணிக்கு 37 தொகுதிகளும், அதிமுக மற்றும் பாஜகவுக்கு தலா ஒரு தொகுதி வெற்றி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், 9 தொகுதிகளில் திமுகவின் நிலை சற்று ஏற்ற இறக்கமாக உள்ளதால் கள நிலவரங்கள் மாறுப்படலாம். எனவே, பின்னாடி குறிப்பிட்டுள்ள வகையின்படி நிலவரங்கள் இருக்கலாம். 


திமுக கூட்டணி - 28
அதிமுக கூட்டணி - 7
பாஜக கூட்டணி - 4


மக்களவை தேர்தலை தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வர விரும்பக்கூடிய கட்சிகள் எவை? யார் முதலமைச்சர்..? என்று வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 


அதில், அதிகபட்சமாக திமுகவும் 31.8 சதவீதம் பேரும், அதிமுகவும் 21.5 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 16.2 சதவீதம் பேரும், தமிழக வெற்றிக் கழகத்துக்கு 15. 2 சதவீதம் பேரும், பாஜகவுக்கு 10.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் 


அடுத்த முதலமைச்சர்..?


மு.க.ஸ்டாலின் - 30.7 சதவீதம் பேர்
எடப்பாடி பழனிசாமி - 21.7 சதவீதம் பேர்
சீமான் - 15.5 சதவீதம் பேர்
விஜய் - 14.5 சதவீதம் பேர்


தான் சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தலிலேயே நடிகர் விஜய் இத்தனை சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது. 


சினிமா மர்றும் அரசியல் கலந்த தமிழக அரசியல் பண்பாட்டு பின்புலத்தில், கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோருக்கு ஏதேனும் ஒரு திரைப்பிரபலங்களா எனவும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், அதிகபட்சமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 19.8 சதவீதம் பேர் ஆதரவு கொடுத்தனர். தொடர்ந்து, நடிகர் ரஜினி காந்திற்கு 12.8 சதவீதம் பேரும், அஜித் குமாருக்கு 12.6 சதவீதம் பேரும், நடிகர் சூர்யாவிற்கு 3.6 சதவீதம் பேரும், நடிகர் கமலஹாசனுக்கு 3.3 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில், குறிப்பிட்டதக்க வகையில் 19.5 சதவீதம் பேர் யாருமில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.