ABP-C-voter Exit Poll 2021 | ABP-C Voter கருத்துக்கணிப்பு முடிவுகள்: அசாமில் மீண்டும் ஆட்சியமைக்குமா பாஜக?

ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அசாம் மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் குறைந்த வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரியவந்துள்ளது.  

Continues below advertisement

இந்தியாவின் நூற்றாண்டு பாரம்பரிய செய்தி குழுமமான ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அசாம் மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் குறைந்த வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரியவந்துள்ளது.  

Continues below advertisement

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளோடு 2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒப்பிடும்போது இம்முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கணிசமாக தொகுதிகள் அதிகரித்துள்ளது. எனினும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் குறுகிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி முழு விவரம்: 


கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 126 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி(74), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(39), இதர கட்சிகள்(13) இடங்களை பெற்று இருந்தன. இம்முறை கருத்துக் கணிப்புகளின் முடிவின்படி அது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 58-71 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 53-61 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் இதர கட்சிகளுக்கு 2 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 6 இடங்கள் வரை குறைவாகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 20 இடங்கள் வரை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

வாக்கு சதவிகிதம்:

2016-ஆம் ஆண்டு நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(41.9), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(31), இதர கட்சிகள்(27.1)  என்ற வாக்கு சதவிகிதம் பெற்று இருந்தது. அதுவே இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி(42.9), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(48.8), இதர கட்சிகள்(8.3) வாக்கு சதவிகிதங்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை விட இந்த முறை பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதர கட்சிகளுக்கு குறைந்த வாக்கு சதவிகிதம் தான் இங்கு வெற்றியாளரை தீர்மானிக்க உள்ளது. 

மண்டல் வாரியாக முடிவுகள்:


போடோலாந்து பகுதி: 

போடோலாந்து பகுதியில் மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(15),ஐக்கிய முற்போக்கு கூட்டணி(2), இதர கட்சிகள்(1) ஆகிய தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தன. இம்முறை கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி  தேசிய ஜனநாயக கூட்டணி 9-11 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 7-9 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. 

வாக்கு சதவிகிதம் பொறுத்தவரை போடோலாந்து பகுதியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(39), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(19.9), இதர கட்சிகள்(41.1)  என்ற வாக்கு சதவிகிதம் பெற்று இருந்தது. அதுவே இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி(47.1), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(42.8), இதர கட்சிகள்(10.1) வாக்கு சதவிகிதம் களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பராக் பகுதி: 

பராக் பகுதியில் மொத்தமுள்ள 15 தொகுதிகளில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(8),ஐக்கிய முற்போக்கு கூட்டணி(3), இதர கட்சிகள்(4) ஆகிய தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தன. இம்முறை கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி  தேசிய ஜனநாயக கூட்டணி 2-4 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 11-13 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. 

வாக்கு சதவிகிதம் பொறுத்தவரை பராக் பகுதியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(38), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(29.6), இதர கட்சிகள்(32.4)  என்ற வாக்கு சதவிகிதம் பெற்று இருந்தது. அதுவே இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி(40.8), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(54.9), இதர கட்சிகள்(4.3) வாக்கு சதவிகிதம் களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதி:

மலைப் பகுதியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(4),ஐக்கிய முற்போக்கு கூட்டணி(4) ஆகிய தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தன. இம்முறை கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி  தேசிய ஜனநாயக கூட்டணி 4-5 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 0-1 இடமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. வாக்கு சதவிகிதம் பொறுத்தவரை மலைப் பகுதியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(42.9), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(37.1), இதர கட்சிகள்(20)  என்ற வாக்கு சதவிகிதம் பெற்று இருந்தது. அதுவே இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி(49.5), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(36.5), இதர கட்சிகள்(14.1) வாக்கு சதவிகிதங்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


அசாம் கீழ் பகுதி: 

அசாம் கீழ் பகுதியில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(17),ஐக்கிய முற்போக்கு கூட்டணி(10), இதர கட்சிகள்(5) ஆகிய தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தன. இம்முறை கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி  தேசிய ஜனநாயக கூட்டணி 9-11 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 21-23 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. வாக்கு சதவிகிதம் பொறுத்தவரை அசாம் கீழ் பகுதியில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(39.7), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(30.7), இதர கட்சிகள்(29.6)  என்ற வாக்கு சதவிகிதம் பெற்று இருந்தது. அதுவே இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி(36.8), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(53.9), இதர கட்சிகள்(9.3) வாக்கு சதவிகிதங்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய அசாம் பகுதி:

மத்திய அசாம் பகுதியில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(9),ஐக்கிய முற்போக்கு கூட்டணி(3), இதர கட்சிகள்(2) ஆகிய தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தன. இம்முறை கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி  தேசிய ஜனநாயக கூட்டணி 4-6 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 8-10 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. வாக்கு சதவிகிதம் பொறுத்தவரை மத்திய அசாம் பகுதியில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(38.2), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(33.3), இதர கட்சிகள்(34.5)  என்ற வாக்கு சதவிகிதம் பெற்று இருந்தது. அதுவே இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி(41.9), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(55.7), இதர கட்சிகள்(2.5) வாக்கு சதவிகிதம் களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அசாம் பகுதி: 

வடக்கு அசாம்  பகுதியில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(4), இதர கட்சிகள்(2) ஆகிய தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தன. இம்முறை கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி  தேசிய ஜனநாயக கூட்டணி 2-4 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 0-2 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடையும் பட்சத்தில் இங்கு இதர கட்சிகளுக்கு இரண்டு இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. வாக்கு சதவிகிதம் பொறுத்தவரை வடக்கு அசாம் பகுதியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(38.2), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(27.3), இதர கட்சிகள்(34.5)  என்ற வாக்கு சதவிகிதம் பெற்று இருந்தது. அதுவே இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி(51.3), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(44.3), இதர கட்சிகள்(4.3) வாக்கு சதவிகிதங்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


தேயிலை தோட்ட பகுதி: 

தேயிலை தோட்ட பகுதியில் மொத்தமுள்ள 36 தொகுதிகளில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(29), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(7) ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தன. இம்முறை கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 28-30 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 6-8 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. வாக்கு சதவிகிதம் பொறுத்தவரை தேயிலை தோட்ட பகுதியில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி(49.4), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(37.1), இதர கட்சிகள்(13.5)  என்ற வாக்கு சதவிகிதம் பெற்று இருந்தது. அதுவே இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி(48.2), ஐக்கிய முற்போக்கு கூட்டணி(42.5), இதர கட்சிகள்(9.5) வாக்கு சதவிகிதம் களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola