சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் வாக்காளர்களும் வீதி வீதியாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கடந்த 30ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 4 நாட்கள் நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் சுமார் 7,600 பேர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். 

Continues below advertisement

7,600 வேட்புமனுக்கள் தாக்கல்

இதனையடுத்து நேற்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது பல்வேறு வேட்புமனுக்களில் உரிய தகவலும், சொத்து மதிப்பும் சரிவர நிரப்பப்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 7600 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அதில் 6,217 ஆண்களும், 1,380 பெண்களும், 3 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தமாக 7,600 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 108 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2,449 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

இந்த நிலையில் 4,998 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 2,449 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 13 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட தகுதியுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தேர்தல் களத்தில் களம் இறங்கியுள்ள முக்கிய தலைவர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Continues below advertisement

களத்தில் முக்கிய தலைவர்கள் யார்.?

கொளத்தூர் - முதலமைச்சர் ஸ்டாலின்.

எடப்பாடி - எடப்பாடி பழனிசாமி.

பெரம்பூர் , திருச்சி கிழக்கு - விஜய்.

காரைக்குடி - சீமான் 

தர்மபுரி - சவுமியா அன்புமணி.

விருத்தாச்சலம் - பிரேமலதா விஜயகாந்த்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்.

சாத்தூர் - நயினார் நாகேந்திரன்.

ஶ்ரீபெரும்புதூர் - செல்வபெருந்தகை.

அவிநாசி - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

அதே நேரம் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 7,255 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் 4,275 மனுக்கள் ஏற்கப்பட்டது. 2,543 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது அதில் 437 மனுக்கள் திரும்பபெறப்பட்டது, கடைசியாக 3,998 பேர் தேர்தலில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.