பெண்களுக்கு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், உயர்கல்வி நிறுவனங்களில் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.
தற்காப்பு பயிற்சிகள்:
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவிகள் மற்றும் பேராசிரியைகளுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும். மாணவிகள் கல்லூரியில் சேரும் போதே, அவசர காலங்களில் தொடர்பு கொள்ளக்கூடிய எண்கள் கொண்ட கையேடு வழங்க வேண்டும் எனவும் யு.ஜி.சி தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான வழிகாட்டு பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. அதில், கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களுக்கு ஒரு கையேடு வழங்கப்பட வேண்டும்
அதில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய விரிவான தகவல்கள் இருக்க வேண்டும். அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் சரியான நடத்தைகளை பட்டியலிடப்பட வேண்டும்.
உதவி எண்கள்:
மாணவர் ஆலோசகர்கள், ராக்கிங் எதிர்ப்பு செல், ப்ரொக்டர் அலுவலகம், மருத்துவ அவசர நிலைகள், சுகாதார மையம், கேண்டீன் மற்றும் தேவைப்பட்டால் மற்ற பல்கலைக்கழக அதிகாரிகளை அணுகுவதற்கான உதவி எண்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
உளவியல் சிக்கல்:
மாணவர்களின் உளவியல் சிக்கலை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.
அனைத்து கட்டிடங்கள், திறந்தவெளி பொது இடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு
போக்குவரத்து, ஓய்வறைகள், நடைபாதைகள், நுழைவு மற்றும் வெளியேறுதல் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
போதுமான எண்ணிக்கையிலான பெண் பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்
பெண்களுக்கு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், உயர்கல்வி நிறுவனங்களில் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான வழிகாட்டுதல்களை கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது