2022 ம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரியில் மாதத்தில் குரூப் 2 மற்றும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர், டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. தேர்வு அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். தேர்வுக்கான அறிவிப்புக்கு முன், மாடல் வினாத்தாள் வெளியிடப்படும் எனவும், பாடத்திட்ட அமைப்பு குறித்து கடந்த 1ஆம் தேதி முதல் ஆலோசித்து ஆணையம் தயாரித்து வருகிறது எனவும் தகவல் தெரிவித்தார்.
மேலும், டிஎன்பிஸ்சி தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம் என்றும், ஒன் டை ரிஜிஸ்டிரேசன் செய்ய வேண்டும் என்றும், தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வரும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரம், இனி தேர்வு முடிந்த பின் தனியாக பிரிக்கப்படும் என்றும் கூறினார்.
குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான காலி பணியிடங்கள் - 5831,குரூப் 4 தேர்வில் பழைய காலி பணியிடம் 5255 உள்ளதாக அறிவிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 தேர்வுகள் நடத்தப்படும் என்று கடந்த முறையும் இதோபோல் அறிவிப்பு வெளியாகியது. ஆனால் தேர்வு நடத்தப்படவில்லை என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் தேர்வுகள் நடத்தமுடியவில்லை. இந்த முறை அறிவித்தபடி தேர்வுகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்வோம் என்று பதிலளித்தார்.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு சட்டசபையில் டிஎன்பிஎஸ்சி அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் என்று அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் இடம்பெறும் என்றும், குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் தமிழ் தகுதித் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
தேர்வுக்கான முழுபட்டியல் விவரம் :
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்