CBSE 12th Result 2025 Date: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள், மே மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியாகலாம் என தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.

Continues below advertisement

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு:

மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், அதில் ஈட்டும் மதிப்பெண்களும் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன் காரணமாகவே இந்த தேர்தல் முடிவுகள் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர் இடையேயும் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்துகிறது.  இந்நிலையில் நடப்பாண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் முடிவுகள் எப்போது வெளியாகும், அதனை அறிந்துகொள்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 17 லட்சத்து 88 ஆயிரம் மாணவர்கள் 120 வகையான, 12ம் வகுப்பு தேர்வுகளை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெற்றது. அந்த விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் வழக்கமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்,மே மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியாகும். உதாரணமாக 2022ம் ஆண்டு ஜுலை 22ம் தேதியும், 2023ம் ஆண்டு மே 12ம் தேதியும், 2024ம் ஆண்டு மே 13ம் தேதியும் வெளியானது. அதன்படி, நடப்பாண்டிற்கான 12ம் வகுப்பு தேர்வு முடிவுப் மே இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாக உள்ளது.

Continues below advertisement

தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?

  • CBSE அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in-ஐ அணுகவும்
  • “ CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025 ” என்ற இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்
  • உங்கள் ரோல் நம்பர், பள்ளி எண் மற்றும் அட்மிட் கார்டு ஐடியை பதிவிடுங்கள்
  • "சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்யுங்கள்
  • உங்களது 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்

தேர்வு முடிவுகளை அறிய மாற்று வழிகள்:

CBSE அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் தவிர, மாணவர்கள் DigiLocker, SMS, UMANG செயலி மற்றும் IVRS சேவைகள் வழியாகவும் தங்கள் 12 ஆம் வகுப்பு CBSE முடிவுகளைப் பார்க்கலாம். அவற்றில், 

  • டிஜிலாக்கர் செயலி :  12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ முடிவை அணுக உங்கள் ஆதார்-இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டு உள்நுழையவும் .
  • உமாங் செயலி : உங்கள் தேர்வு முடிவைப் பெற செயலியைப் பதிவிறக்கம் செய்து 'CBSE' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உள்ளே உங்கள் ரோல் நம்பரை பதிவு செய்து முடிவுகளை அறியலாம்.
  • குறுஞ்செய்தி : CBSE12 [Roll Number] [Date of Birth in DDMMYYYY format] [School Number] [Centre Number]" ஆகிய விவரங்களை நிரப்பி 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உங்கள் தேர்வு முடிவு குறுஞ்செய்தியாக உங்களுக்கு கிடைக்கும்.
  • IVRS : உங்கள் 12 ஆம் வகுப்பு CBSE முடிவை அழைப்பின் மூலம் கேட்க அதிகாரப்பூர்வ IVRS எண்ணான 24300699 டயல் செய்து உங்கள் முடிவுகளை அறியலாம்

கடந்த ஆண்டு 16.6 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 14.5 லட்சம் பேர் அதாவது 87.33 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். திருவனந்தபுரம் மாவட்டம் 99.91 சதவிகித தேர்ச்சியுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

12ம் வகுப்பு தேர்தல் முடிவுகள்:

மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளன. இந்தத் தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதினர். மாணவர்கள் தங்களின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை tnresults.nic.indge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.