கரூர் மாவட்டம் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ் 2023-2024 கல்வியாண்டில் புதிய மாணாக்கர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் மருத்துவப்படிப்பை முடித்து தலைசிறந்த மருத்துவராக வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.


 




கரூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  தலைமையில்   எம்.பி.பி.எஸ் 2023-2024 கல்வியாண்டில் சேர்ந்த புதிய மாணாக்கர்களுக்கான வரவேற்பு மற்றும் துவக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர்: முதலாமாண்டு எம்.பி.பி.எஸ் 2023-2024 கல்வியாண்டில் புதிய மாணாக்கர்களுக்கான வரவேற்பு மற்றும் துவக்க நாள் நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சியாகும். இந்நாளில்  நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் நானும் மருத்துவத் துறை சார்ந்தவன் நான் 2005 ஆகஸ்ட் 16  முதலாமாண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் பெற்றோர்களுடன் கலந்து கொண்டது தற்பொழுது நினைவுக்கு வருகிறது. 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாங்கள் நுழைவுத் தேர்வு மூலம் அன்று மருத்துவ படிப்பில் தேர்வாகினோம். நீட் தேர்வு மூலம் தேர்வாகி உள்ளீர்கள். முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி நுழைந்த மகிழ்ச்சியே ஒப்பிட முடியாது நீங்கள் மருத்துவ படிப்பில் ஒரு எண்ணத்தை நிலை நிறுத்தி  தங்கள் திறன்களை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். மருத்துவ கல்லூரியானது திறந்து 5 ஆண்டுகள் தான் ஆகி உள்ளது. நீங்கள் கல்லூரியில் படிக்கும் பொழுதே அறிவியல் தொடர்பான ஆராய்ச்சி செய்வதிலும் முன்வர வேண்டும்.


 




 


மருத்துவ படிப்பு இறுதி மூச்சு வரை மகிழ்ச்சியுடனும் சந்தோசமாகவும் படிக்க வேண்டும். மருத்துவ பாட புத்தகங்களில் உள்ள மருத்துவ குறிப்பீடுகளை தேர்வு செய்து அதனை குறிப்பு எடுத்து படிக்க வேண்டும். மருத்துவத் துறையில் எல்லாவிதமான குணப்படுத்தும் மருந்து வகைகளை கண்டுபிடித்து வெளியே கொண்டு வருவதற்கு முன்வர வேண்டும். நீங்கள் பயிலக்கூடிய மருத்துவப் படிப்பை உறுதியுடன் படிக்க வேண்டும். இந்தாண்டு மருத்துவ படிப்பிற்காக சேலம் ஈரோடு நாமக்கல் அதேபோல் வெளி மாநிலத்தில் இருந்து 111 மாணவ மாணவியர்கள் சேர்ந்து உள்ளீர்கள். பணிவில் தாழ்வாகவும் படிப்பில் உயர்வாகவும் இருக்க வேண்டும் மொழிகளில் வேறுபாடு இருந்தாலும் மருத்துவ மொழி என்று புரிந்து படிக்க வேண்டும். மருத்துவ கல்லூரி படிப்பை சந்தோஷமான பயணமாக மேற்கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ படிப்பில் அறிவு தேடல் கண்டிப்பாக இருக்க வேண்டும் படிக்கும்போதே உங்களுடைய திறன்களை மேம்படுத்தி பல்வேறு வகையில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.


 




 


பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து மருத்துவ படிப்பு தொடர்பான ஆதரவு அளிங்கள். மருத்துவ படிக்கின்ற நீங்கள் தலைசிறந்த மருத்துவராகவும், மிகச் சிறந்த மனிதர்களாகவும் உருவாக வேண்டும் என தெரிவித்தார்.


முதலாமாண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை சீனியர் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மலர் கொடுத்து வரவேற்றார்கள். தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் கடந்து வந்த பாதைகளை சபைகளில் எடுத்து கூறினார்கள். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) மரு. ரமாமணி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மரு. சந்தோஷ் குமார், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் மரு. நளினி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. ராஜா பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.