மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எழுதும் கிராமப்புற  மாணவர்களின் விவரங்கள், மாநில வாரியாகத் தங்களிடம் இல்லை என்று என்டிஏ தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை பதில் அளித்துள்ளது. 


எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. தற்போது சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. 


இந்த சூழலில் நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக அரசு இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆணையம் அமைத்தது. அந்தக் குழுவும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. அதில் பாடத்திட்ட மாற்றம், போதிய பயிற்சியின்மை, பொருளாதாஅம் உள்ளிட்ட காரணங்களால் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. 


 



 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேசியத் தேர்வுகள் முகமையிடம் கேட்கப்பட்ட கேள்வி 


இந்நிலையில் ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேசியத் தேர்வுகள் முகமையிடம் கடந்த மாதம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில், ''நீட் தேர்வை எழுதும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் குற்றம் சாட்டி இருந்தன. இந்தத் தேர்வில் அரசுப் பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் மாநில வாரியான விவரங்கள், தேசியத் தேர்வுகள் முகமையிடம் உள்ளதா?'' என்று கேட்கப்பட்டிருந்தது. 


Also Read | Arumugasamy Commission Enquiry LIVE: இறப்பதற்கு முன்பு, நான் உட்பட 3 அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்தோம் - ஓ.பி.எஸ்


இந்தக் கேள்விக்கு என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை பதில் அளித்துள்ளது. அந்த பதிலில், ''நீட் தேர்வை எழுதும் கிராமப்புற  மாணவர்களின் விவரங்கள், மாநில வாரியாகத் தங்களிடம் இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 


இந்த செய்தியையும் வாசிக்கலாம்: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் - யூ.ஜி.சி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண