Watch Video: மாட்டுச் சாணத்தை வகுப்பறை சுவற்றில் பூசிய கல்லூரி முதல்வர்; வீடியோ வைரலான நிலையில் அவரே சொன்ன காரணம்!

’’ஒரு கல்லூரியின் முதல்வரே இப்படியிருந்தால், அங்கு படிக்கும் மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும்?’’ என பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Continues below advertisement

டெல்லி கல்லூரியில் பெண் முதல்வர் ஒருவர், வகுப்பறையின் உள் சுவர்களில் மாட்டுச்சாணத்தால் பூசியது இணையத்தில் வைரலான நிலையில், ஆய்வுக்காகவே அவர் அவ்வாறு செய்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

Continues below advertisement

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் லட்சுமிபாய் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் முதல்வர் பிரத்யுஷ் வத்சலா, ஒரு மேசையில் ஏறி வகுப்பறையின் உள் சுவர்களில் மாட்டுச் சாணத்தைப் பூசுகிறார். அதை சமப்படுத்தி, மீண்டும் மீண்டும் கையால் எடுத்துப் பூசுகிறார். அருகில் ஒரு மனிதர் கையில் பாத்திரத்துடன் சாணத்தைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார். இதுதொடர்பான 35 வினாடி காணொளி இணையத்தில் வைரலாகியது.

ஒரு கல்லூரியின் முதல்வரே இப்படியா?

வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், ’’ஒரு கல்லூரியின் முதல்வரே இப்படியிருந்தால், அங்கு படிக்கும் மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும்?’’ என பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு சம்பந்தப்பட்ட லட்சுமி கல்லூரி முதல்வர் வத்சலா, “நான் செய்தது ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியே”என விளக்கமளித்துள்ளார்.

ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதி

இதுகுறித்து கூறுகையில், ”வகுப்பறையின் சுவர்களில் மாட்டுச்சாணம் பூசியது, ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். ”பாரம்பரிய இந்திய அறிவைப் பயன்படுத்தி வெப்ப அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு” (Study of Heat Stress Control by Using Traditional Indian Knowledge) என்கிற தலைப்பில் இந்த திட்டம் தற்போது சோதனை முயற்சியில் உள்ளது.

ஒரு வாரத்திற்குப் பிறகே முழு ஆராய்ச்சியின் விவரங்களையும் என்னால் பகிர்ந்துகொள்ள முடியும். இயற்கையான சாணத்தைக் கைகளால் தொடுவதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதால் அதனை நானே என் கைகளால் பூசினேன். சிலர் முழு விவரங்களையும் தெரியாமல் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.

வகுப்பறைகளை குளுமையாக்கவே

வகுப்பறைகளை உள்ளூர் முறையில் குளுமையாக்க இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்த வீடியோ கல்லூரி ஆசிரியர்களின் குழுவில் பகிரப்பட்டது. அதை யாரோ இணையத்தில் பதிவேற்றபின்பு வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola