இதில் பல்வேறு உயர் கல்வி படிப்புகளில் சேர்க்கை கிடைக்கப் பெற்ற 32 மாணாக்கர்களுக்கு (ஆண் 16, பெண் 16) சேர்க்கை கடிதங்கள் வழங்கப்பட்டன.


விஐடி போபால் பல்கலைக்கழகத்தில், ஊரகப் பகுதி மாணவர்கள் முன்னேற்றத்திற்கான ஆதரவு நல்கும் STARS திட்டத்தின் 2024- 25 கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு நிகழ்வு ஜூலை 3 அன்று தொடங்கப்பட்டது. விஐடி போபால் பல்கலைக்கழகத்தில் வருங்காலத்தை உறுதி செய்கிற பல்வேறு படிப்புகளில் இந்த பெருமைமிகு திட்டத்தின் கீழ் சேர்ந்த அனைத்து புதிய மாணவர்களுக்கு சேர்க்கை கடிதங்கள் வழங்கப்பட்டன.


மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கை


ஊரகப் பகுதி மாணவர்கள் முன்னேற்றத்திற்கான ஆதரவு என்னும் இந்த திட்டத்தை மத்தியப் பிரதேசத்தின் ஊரகப்பகுதிகளைச் சேர்ந்த, உயர் கல்வி என்பது எட்டாக் கனியாக உள்ள அடித்தட்டு மக்களின் உயர்வைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தரமான கல்வியை அளிக்கும் பொருட்டு இந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமாகிய விஸ்வநாதன், 2019 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அன்று முதல் மத்தியப் பிரதேசத்தின் அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் மாவட்டத்திற்கு முதலிடம் பெற்றவர்களுக்கு அதாவது ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு மாணவன், ஒரு மாணவிக்கு சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணாக்கர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவு ஏற்பாட்டுடன் 100% கட்டணமில்லாக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.


அப்போது விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் உதவி துணைத் தலைவர் காதம்பரி விஸ்வநாதன் கூறியதாவது:


’’மத்தியப் பிரதேசத்தின் ஊரகப்பகுதிகளைச் சேர்ந்த பிள்ளைகள், மிகுந்த துன்பம் மிக்க சூழல்களில் வளர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு விஐடி போபால், கல்விக் கூடமாக மட்டுமல்ல அதற்கும் மேலான ஒன்றாகவே அவர்கள் மனங்களில் நிறைந்துள்ளது.


வீட்டிலிருந்து பிரிந்து வந்து படித்த போதிலும் இதனை அவர்கள் தங்கள் வீடு போலவே பாவிக்கும் அளவில் பேராசிரியர்களும் பாதுகாப்பாளர்களும் கனிவுடன் பார்த்துக் கொள்வதால் அவர்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர். பேராசிரியர்களும் பாதுகாப்பாளர்களும் அவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல் வருங்காலத்தில் சமூகத்தை எதிர்கொள்வதற்கான நுட்ப திறனையும் நுண்ணறிவையும் கற்றுத் தருகின்றனர். எனவே அவர்களுக்கு இந்த கல்விக் கூடம் உணர்ச்சிகளின் மையமாகத் தெரிகிறது என்றால் மிகையாகாது.


175 பேர் பயன்


STARS திட்டத்தின் வாயிலாக, மத்திய பிரதேசத்தின் ஆத்ம நிர்பர் என்னும் சுயசார்பு தொழில் நிறைவேற பங்களிப்பு வழங்கப்படும். வருங்காலங்களில் உருவாகும் இத்தகைய பட்டதாரிகள் மத்தியப் பிரதேசத்தின் ஊரகப்பகுதிகளின் தோற்றத்தை மாற்றிக் காட்டி, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வார்கள். STARS திட்டத்தின் கீழ் இதுவரை, ஊரக மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த 175 மாணவர்கள் ( 100 மாணவர்களும் 75 மாணவிகளும்) பயனடைந்துள்ளனர்.


இவ்வாறு காதம்பரி தெரிவித்தார்.


ரூ.59 லட்சம் வரை ஊதியம்


வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) என்னும் பாரம்பரிமும் பெருமையும் மிக்க நிறுவனத்தின் கிளை கல்விக் கூடமான விஐடி போபால் பல்கலைக்கழகம், வருங்காலத்தை உறுதி செய்கிற கல்வி வழிமுறைகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.


இங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் CALtech (Collaborative and active learning) மூலமாக ஆகச்சிறந்த கல்வியையும் திறன் மேம்பாட்டையும் மாணாக்கர்களுக்கு வழங்குகிறார்கள். வேலைவாய்ப்பு பெறுவதில் விஐடி போபால், 90% அளவில் சாதித்துக் காட்டி உள்ளது. இதில் ஆண்டுக்கு ரூ.59 இலட்சம் வரையிலான ஊதியம் அடங்கும்.


குறிப்பாக, 2023 - ல் தேர்ச்சி பெற்ற STARS மாணவர்கள், பிரபல பன்னாட்டு நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். இதில், ஆண்டுக்கு ரூ 59 இலட்சம் ஊதியத்தை மைக்ரோசாப்ட்டில் இருந்து அதிக ஊதியம் ஆக ஷாலிஜா செங்கர் மற்றும் தாட்டியா ஆகியோர் பெற்றுள்ளனர். இந்த போக்கு 2024 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் இடையேயும் தொடர்கிறது. இதுவரை, 19 STARS மாணவர்கள், பெரும் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.