விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB மற்றும் TRB  ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு 09.02.2026 அன்று இலவச பயிற்சி வகுப்பு  நடைபெற உள்ளது. - என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

Continues below advertisement

இலவச பாடவாரியானத் தேர்வுகள் மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் நடைபெறும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, SSC, RRB மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்கள்(SSC, RRB, LIC AAO, IB, ASST Commandant....) மற்றும் முப்படைகளின் போட்டித் தேர்வுகளுக்கான ஆட்சேர்ப்பு முகமைகளால் வெளியிடப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பொதுவாக உள்ள பாடங்களான பொது அறிவு, நுண்ணறிவு, திறனறிவு, காரணவியல், மொழி அறிவு (தமிழ், ஆங்கிலம்) போன்ற பாடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விருதுநகரில் 09.02.2026 அன்று முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் இலவச பாடவாரியானத் தேர்வுகள் மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம். எனவே, அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பொதுவான பாடங்களுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.

Continues below advertisement