19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜின் அபார சதத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று அசத்தியுள்ளது. 

Continues below advertisement

இந்தியாவுக்கு இமாலய இலக்கு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டித்தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கான் அணியில் ஃபைசல் மற்றும் உசைருல்லா நியாசாய் ஆகியோரின் அபார சதத்தால் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்களை குவித்தது. 

சுளுகெடுத்த சூர்யவன்சி: 

இமாலய இலக்கை சேஸ் செய்த இந்திய அணிக்கு ஆரோன் ஜார்ஜ் மற்றும் வைபவ் சூர்யவன்சி அபார தொடக்கத்தை அளித்தனர். குறிப்பாக் சூர்யவன்சி ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவைத்து எடுத்தார். இதனால் பவர்பிளேவில் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சூர்யவன்சி 24 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். 

Continues below advertisement

மாத்ரே-ஆரோன் ஜார்ஜ் அசத்தல்: 

அணியின் ஸ்கோர் 9.3 ஓவர்களில் 90 ரன்களை கடந்த நிலையில் சூர்யவன்சி 33 பந்துகளில் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே சிக்சருடன் தனது ரன் கணக்கை தொடங்கினார். ஒருப்பக்கம் ஆரோன் ஜார்ஜ் நிதானமாக ஆட மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இந்த தொடர் முழுவதும் மோசமான ஃபார்மில் இருந்த மாத்ரே பொறுப்புடன் விளையாடி  அரைசதம் அடித்தது மட்டுமில்லாமல் 2 வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இந்தியா வெற்றி: 

அடுத்ததாக  விஹான் மல்ஹோத்ரா களமிறங்கினர், அவரும் அதிரடியாக ஆட இந்திய அணி வெற்றியை நோக்கி பயணித்தது, சிறப்பாக ஆடிய ஆரோன் ஜார்ஜ் சதம் அடித்து 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 41.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

ஆப்கானிஸ்தான் பெரிய இலக்கை நிர்ணயித்தாலும் ஃபில்டிங்கில் 4 கேட்ச்களை கோட்டைவிட்டது அந்த அணியின் தோல்விக்கு காரணமானது.

சேசிங்கில் சாதனை:

U19 உலகக்கோப்பையில் இதுவரை ஒரு முறை மட்டுமே 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யப்பட்டு இருந்தது, அந்த சாதனையை இந்திய அணி முறியடித்தது மட்டுமில்லாமல் அதிகப்பட்ச சேசிங்கையும் செய்து காட்டியுள்ளது

அதிகம் சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர்கள்:

311 - INDvs AFG, ஹராரே, 2026305 - NZ vs IRE, கொழும்பு RPS, 2006294 - SA vs BAN, கூலிட்ஜ், 2022292 - WI vs SL, கிறைஸ்ட்சர்ச், 2010279 - WI vs IRE, லிங்கன், 2018