விழுப்புரம்‌ மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில்‌, பள்ளிக்கல்வித்துறை சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்கள்‌ தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில்‌, 6-ஆம்‌ வகுப்பு முதல்‌ 9-ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களின்‌ தமிழ்‌, ஆங்கிலம்‌ மற்றும்‌ கணிதம்‌ கற்றல்‌ நிலையை  மேம்படுத்திட ஆசிரியர்கள்‌ தனிக்கவனம்‌ செலுத்திட வேண்டும்‌ என ஆசிரியர்களுக்கு விழுப்புரம்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, பள்ளிக்கல்வித்துறை சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்கள்‌ தொடர்பான ஆய்வுக்கூட்டம்‌ மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில்‌ நடைபெற்றது.


பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்‌, “விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌, பள்ளி செல்லா இடைநிற்றல்‌ குழந்தைகளை மீண்டும்‌ பள்ளிக்கு வருகை செய்திடும்‌ வகையில்‌, வட்டாட்சியர்கள்‌, வட்டார கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ கிராம நிர்வாக அலுவலர்கள்‌ ஆகியோர்‌ பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி, மாணவர்கள்‌ பள்ளிக்கு மீண்டும்‌ வருகை புரிவதை உறுதி செய்திட வேண்டும்‌.


விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌, 1 முதல்‌ 5-ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு கற்றல்‌ திறனை மேம்படுத்திட “எண்ணும்‌ எழுத்தும்‌” மற்றும்‌ “இல்லம்‌ தேடிக்‌ கல்வி” திட்டமானது மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌, மிகவும்‌ பழுதான மற்றும்‌ பயன்படாத பள்ளிக்கட்டிடங்கள்‌ மற்றும்‌ மதில்‌ சுவர்களை ஊராட்சி தலைவர்‌ மற்றும்‌ வட்டார வளர்ச்சி அலுவலரிடம்‌ கலந்தாலோசித்து கட்டிடங்களை இடித்து முழுமையாக அப்புறபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌. பள்ளிகளில்‌, மழைக்காலங்களில்‌ மழைநீர்‌ தேங்காதவாறு வடிகால்‌ வசதியினை ஏற்படுத்திட வேண்டும்‌.


பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ பாதுகாப்பினை உறுதி செய்திடும்‌ வகையில்‌, தலைமையாசிரியர்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்‌. மேலும்‌, பாலியல்‌ தொடர்பான புகார்கள்‌ வரப்பெற்றால்‌ உடனடியாக மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, வட்டாட்சியர்கள்‌, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்‌, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலருக்கு தகவல்‌ தெரிவித்திட அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும்‌ உள்ள பள்ளி வளாகம்‌, கழிப்பறை, சமையலறை, வகுப்பறை, விளையாட்டு மைதானம்‌ உள்ளிட்டவற்றை தூய்மையாக பராமரித்திட வேண்டும்‌. இப்பணிகளில்‌ ஈடுபடும்‌ தூய்மைப்பணியாளர்களுக்கு ஊதியம்‌ முறையாக செல்வதை உறுதி செய்திட வேண்டும்‌ என அறிவுறுத்தப்பட்டது.


உயர்நிலைப்பள்ளி மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ செயல்பட்டு வரும்‌, உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு அதிவே இணையதள வசதி ஏற்படுத்திடும்‌ 100௱௦௦ வரை தரம்‌ உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பள்ளி மேலாண்மைக்‌ குழு மூலம்‌, தீர்மானம்‌ இயற்றப்பட்டு, 741560 8௭% செயலியில்‌ பள்ளிகளுக்கு தேவையான கோரிக்கைகளை பதிவேற்றம்‌ செய்து, கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து தீர்வு காண வழிவகுத்திட அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகளில்‌ கழிவறை வசதி ஏற்படுத்திடும்‌ வகையில்‌, நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.


விழுப்புரம்‌ மாவட்ட அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ ஆய்வு செய்த வகையில்‌, 6-ஆம்‌ வகுப்பு முதல்‌ 9-ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களின்‌ தமிழ்‌, ஆங்கிலம்‌ மற்றும்‌ கணிதம்‌ கற்றல்‌ நிலையை மேம்படுத்திட தனிக்கவனம்‌ செலுத்திட வேண்டும்‌. ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியைகள்‌ பள்ளி நேரத்திற்கு சரியான நேரத்தில்‌ வருகை தருவதை உறுதி செய்திட வட்டார அளவிலான கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்ட கல்வி அலுவலர்கள்‌ தொடர்‌ கண்காணிப்பில்‌ ஈடுபட வேண்டும்‌.


மேலும்‌, பள்ளிகளில்‌ பயிலும்‌ குழந்தைகளுக்கு Good Touch ற்றும்‌ Bad Touch குறித்தும்‌ போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்‌. மேலும்‌, மாணவர்களுக்கு போதைப்பொருள்‌ தடுப்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும்‌ வாரம்‌ ஒருமுறை காவல் துறை, சுகாதாரத்துறையில்‌ பணிபுரியும்‌ மருத்துவர்கள்‌ மற்றும்‌ மூத்த அலுவலர்களை கொண்டு போதிய அளவிலான விழிப்புணர்வு மற்றும்‌ ஆலோசனைகள்‌ வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌” என அறிவுறுத்தினார்.


மேலும், வட்டார அளவிலான கல்வி அலுவலர்களுடன்‌ பள்ளிகளுக்கான தேவைகள்‌ மற்றும்‌ நிலுவையில் உள்ள பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.