மாணவர்களிடையே படைப்புச் சிந்தனையையும், சுயசார்பையும் ஊக்குவிக்கும் நோக்குடன் நடத்தப்படும் விக்சித் பாரத் பில்டத்தான் 2025 க்கான பதிவு இன்று (அக்டோபர் 11, 2025) முடிவடைகிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவில் உள்ள பள்ளிகள் மூன்று முதல் ஐந்து மாணவர்கள் கொண்ட குழுக்களை அமைக்கலாம். பங்கேற்கும் குழுக்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.
நேரடி ஒளிபரப்பு
இந்த புதுமையான நிகழ்வு அக்டோபர் 13 அன்று நடைபெற உள்ளது. இது நாடு முழுவதும் vbb.mic.gov.in அல்லது schoolinnovationmarathon.org/registration ஆகிய அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
பில்டத்தானில் மொத்தம் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 10 தேசிய அளவிலான வெற்றியாளர்கள், 100 மாநில அளவிலான வெற்றியாளர்கள் மற்றும் 1,000 மாவட்ட அளவிலான வெற்றியாளர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும்.
பில்டத்தான் நான்கு தேசிய கருப்பொருள்களைக் கொண்டுள்ளது. அவை என்னென்ன?
- ஆத்ம நிர்பர் பாரத்: சுயசார்புள்ள அமைப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குதல்.
- சுதேசி: உள்நாட்டு யோசனைகள் மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல்.
- வோக்கல் ஃபார் லோக்கல்: உள்ளூர் தயாரிப்புகள், கைவினைப்பொருட்கள் மற்றும் வளங்களை மேம்படுத்துதல்.
- சம்ரித்தி: செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வழிகளை உருவாக்குதல்.
மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மாணவர்கள் தாங்கள் தீர்க்க விரும்பும் பிரச்சனை, உருவாக்கப்பட்ட புதுமையான தீர்வு அல்லது முன்மாதிரி, அதன் செயல்பாடு மற்றும் அவர்களின் யோசனையின் சாத்தியமான தாக்கம் குறித்து 2 முதல் 5 நிமிட வீடியோவை உருவாக்க வேண்டும். இந்த வீடியோவை அக்டோபர் 13 முதல் அக்டோபர் 31 வரை சமர்ப்பிக்க வேண்டும். வெற்றியாளர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: vbb.mic.gov.in