இந்திய ஆட்சிப் பணிக்கான நபர்களைத் தேர்வு செய்யும் 2022ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.


தேர்வு முறை எப்படி?


முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்பவும் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.



முன்னதாக செப்டம்பர் மாதம் 16, 17, 18, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இரண்டு வேளைகளிலும் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் மதியம் 2 முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடைபெற்றது. 





 


 

அதே நாளில் பிற்பகல் ஐந்தாம் தாளுக்கான தேர்வும் (General Studies-IV) 24.09.2022 (சனிக்கிழமை) இந்திய மொழித் தேர்வும் நடைபெற்றது. அதே நாள் பிற்பகலில் ஆங்கில மொழித் தேர்வும் செப்டம்பர் 25ஆம் தேதி இரு வேளையும் விருப்பத் தெரிவுப் பாடத்துக்கான தேர்வுகளும் நடைபெற்றன.







 

இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் யூபிஎஸ்சி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணலுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

 

தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி?


தேர்வர்கள் https://www.upsc.gov.in/sites/default/files/WR_csm_2022_english-name-061222.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை நடந்துகொள்ளலாம். 


நேர்காணல் தேர்வு, ஷாஜகான் சாலையில் உள்ள மத்திய ஆட்சிப் பணியாளர் தேர்வாணையத்தின் தோல்பூர் இல்லத்தில் நடைபெறும். 


தேர்வர்கள் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 011-23385271, 011-23381125, 011-23098543 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம். 


அதேபோல csm-upsc@nic.in என்ற இ-மெயில் முகவரியைத் தொடர்புகொள்ளலாம். நேர்காணல் முடிந்த பிறகு இறுதித் தேர்வு முடிவுகள் 15 நாட்களுக்குள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றப்படும் என்றும் யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.