மத்திய கல்விதுறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையிலான அனைத்து மாநில கல்வி செயலாளர்களுடனான கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணித்துள்ளது. புதிய கல்வி கொள்கை, கொரோனா காலத்தில் இணையவழி கல்வி மற்றும் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக  இந்த காணொளி காட்சி மூலமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் பேரிடர் சூழலில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடத்த முடியுமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என அண்மையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதுதொடர்பான மத்தியக் கூட்டத்தையும் அரசு புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.