யு. கே. (UK) பல்கலைக்கழகங்களில் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்கள் காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 


காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன், தேர்ந்தெடுகப்பட்ட யு.கே. பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் முழுநேர முதுகலை பட்டப்படிப்பை இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வாகும் மாணவர்கள் இலவசமாக மேற்கொள்ள முடியும்.


வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதார அமைப்புகள் மற்றும் திறனை வலுப்படுத்துதல்,  உலகளாவிய செழிப்பை ஊக்குவித்தல், உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், திறனை வலுப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளை சமாளித்தல்  ஆகிய துறைகளின் கீழ் விண்ணப்பிக்கலாம். 


யாரெல்லாம் தகுதியுடையவர்கள்:


இதற்கு விண்ணப்பிக்க இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். யு.கே. கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள உரிய தகுதி பெற்றவராக இருப்பதுடன் செப்டம்பர் / அக்டோபர் 2024 -ல் படிப்பிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.


செப்டம்பர் 2023-க்குள் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் எடுத்து இளநிலை பட்டப்படிப்பு பெற்றவராக இருக்க வேண்டும்.


யு.கே. முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு சி.எஸ்.சி. நிதி அளிப்பதில்லை. எனினும், அதன் அவசியம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். 


எம்.பி.ஏ. படிப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுவதில்லை. 


விண்ணப்பிக்கும் முறை: 


காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனின் https://fs29.formsite.com/m3nCYq/omxnv2g3ix/index - என்ற அதிகாரப்பூர்வ  இணையதள முகவரியை க்ளிக் செய்து  ஆன்லைன் விண்ணப்பபதோடு, இந்திய கல்வி அமைச்சகத்தின் https://proposal.sakshat.ac.in/scholarship/- எனும் சாக்சாத் இணையதளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள் - 17.10.2023


இந்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளம் வாயிலாக 25 நவம்பர் வரை விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க: -https://www.education.gov.in/


****


அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் வேலைவாய்ப்பு


அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரி (Arulmigu Palaniandavar College of Arts and Culture – APCAC) காலியாக உள்ள உதவி பேராசிரியர், ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்னப்பிக்க அடுத்த மாதம் 9-ம் தேதி கடைசி தேதியாகும்


பணி விவரம்


உதவி பேராசிரியர்


ஆய்வக உதவியாளர்


துறை விவரம்:


வணிகவியல்


இந்திய கலாச்சாரம்


பொருளாதாரம்


விலங்கியல்


ஆங்கிலம்


வரலாறு


இயற்பியல்


பணியிடம் 


இதற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர். 


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் சம்பந்தப்பட்ட துறை முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  பி.எச்.டி. படித்திருக்க வேண்டும்.


NET/SLET/SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி- 09.10.2023


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


The Secretary,


Arulmigu Palaniandavar College of Arts and Culture,


Plani, -624 601


இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்காணல் குறித்த தகவல் அனுப்பப்படும்.