Shocking Video: குஜராத் மாநிலத்தில் இளம்பெண்ணை ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


கொடூரமாக தாக்கப்பட்ட பெண்:


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வணிக வளாகம் ஒன்றில் மூன்றாவது மாடியில் ஸ்பா கடை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு நாகலாந்தைச் சேர்ந்த இளம்பெண் பணிபுரிந்து வருகிறார். இந்த கடைக்கு மோசின் என்பவர் உரிமையாளராக இருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு கடையில் கடையின் உரிமையாளர் மோச்சினுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் வியாபாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.  கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பின்பு, ஒரு கட்டத்தில் அந்த பெண், வாக்குவாதத்தை நிறுத்திவிட்டு கடையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போதும், அந்த பெண்ணை விடாமல், அவரை கடை உரிமையாளர் பின்தொடர்ந்துள்ளார்.


சிந்து பவன் என்ற சாலையில் அந்த இளம்பெண் நடந்துச் சென்றார். அப்போது, அவரை பின் தொடர்ந்த கடையின் உரிமையாளர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொடூரமாக தாக்கியுள்ளார். அதோடு, இல்லாமல் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து, ஆடைகளை கிழித்திருக்கிறார்.


பகீர் வீடியோ:


இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியது. அதில், அந்த பெண் சாலையில் நடந்துக் கொண்டிருக்கிறார். அவரை பின் தொடர்ந்த கடையின் உரிமையாளர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணை கடுமையாக தாக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த பெண்ணைத் தள்ளிவிடவும், தற்காப்புக்காக அந்த பெண்ணும் பதிலுக்கு அந்த நபரை தள்ளிவிட்டிருக்கிறார். இதில் கடும் கோபமடைந்த மோச்சின், அந்த பெண்ணை தலையிலும், கன்னத்தில் தொடர்ந்து அடித்துள்ளார்.






பின்னர், அந்த பெண்ணின் தலைமுடியைப் பிடித்து ஆக்ரோஷமாகத் தாக்கி இருக்கிறார். மேலும், பெண்ணின் ஆடைகளை மோசின் கிழித்து, துன்புறுத்தியிருக்கிறார். தொடர்ந்து இதேபோன்று, அந்த பெண்ணின் முடியை பிடித்து இழுத்து ஈவு இரக்கமின்றி கடுமையாக தாக்கியிருக்கிறார். தொடர்ந்து 5 அல்லது 10 நிமிடங்கள் அந்த பெண்ணை தாக்கியுள்ளது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது.


கைது: 


இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.  தாக்குதலுக்குள்ளான பெண் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை என்றாலும், சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். நான் இந்த பிரச்சனையை தனியாக எதிர்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. இதனால் எனக்கு மனதளவில் எந்தவித பிரச்சனையும் எதிர்கொள்ளவதற்கான மனதைரியம் வந்துள்ளது" என்றார்.