யுஜிசி நெட் தேர்வுக்கு 11,21,225 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதாவது, 4,85,578 ஆண்கள், 6,35,588 பெண்கள் மற்றும் 59 மூன்றாம் பாலினத்தவர் எழுத விண்ணப்பித்தனர்.
இதில், தேர்வை 6 லட்சத்து 84,224 பட்டதாரிகள் எழுதி இருந்தனர். இந்த நிலையில் யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை நேற்று வெளியிட்டது. இதில் மொத்தமாக 1,70,734 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 25 சதவீதம் பேர் கூடத் தேர்ச்சி பெறாத தகவல் வெளியாகி உள்ளது.
யார் யாருக்கு எந்தப் பிரிவில் தேர்ச்சி?
ஜேஆர்எஃப் எனப்படும் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெற 4970 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உதவிப் பேராசிரியர் பணிக்கு 53,694 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல பிஎச்டி படிக்கத் தகுதியுடையவர்கள் ஆக, 1,12,070 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு முடிவுகளை காண்பது எப்படி?
* தேர்வர்கள் https://ugcnet.ntaonline.in/frontend/web/scorecard/ugc-final-score-card2024 என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் தேர்வு விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்பு குறியீடு ஆகியவற்றை உள்ளிடவும்.
* அவ்வாறு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
அதேபோல, https://ugcnet.nta.ac.in./images/99252563665565656565232333333334496ds6jdcutoff.pdf என்ற இணைப்பில் பாட வாரியாகவும் சமூக வாரியாகவும் தேர்வர்கள் பெற்றுள்ள கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதை க்ளிக் செய்தும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://ugcnet.nta.ac.in./images/publicnoticeugc-net-june-2024result.pdf