2023ஆம் ஆண்டுக்கான ஜூன் மாத யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 


இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 


கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) ஒரேகட்டமாக நடத்தப்பட்டது. 2021 டிசம்பர் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெற்றன. இதற்கிடையே 2022 ஜூன் தேர்வுகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற்றன. அதேபோல 2022 டிசம்பர் தேர்வுகள் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் மார்ச் 16ஆம் தேதி வரை நடைபெற்றன.


இதைத் தொடர்ந்து 2023 ஜூன் மாத உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. தேசிய தகுதித் தேர்வு ஜூன் 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. ஜூலை 6ஆம் தேதி அன்று விடைக் குறிப்பு வெளியானது. 8ஆம் தேதி வரை ஆட்சேபிக்க அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இறுதி விடைக் குறிப்பையும் என்டிஏ வெளியிட்டது.


இந்த நிலையில் யுஜிசி 2023ஆம் ஆண்டுக்கான ஜூன் மாத அமர்வின் தேசிய தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. 


தேர்வர்கள் https://cdnbbsr.s3waas.gov.in/s301eee509ee2f68dc6014898c309e86bf/uploads/2023/07/2023072641.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, உதவிப் பேராசிரியர் பணி மற்றும் உதவித் தொகைக்கான கட்- ஆஃப் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.


தேர்வர்கள் https://cnr.nic.in/NTAResult/UGCNETJune2023/Login?apprefno=101052311 என்ற இணைய முகவரியில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு, லாகின் செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.


தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.


தேர்வர்கள் இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in