ஜூன் மாத அமர்வுக்கான யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி? கீழே காணலாம்.

Continues below advertisement

ஜேஆர்எஃப் மற்றும் உதவிப் பேராசிரியர் ஆகிய இரு பணியிடங்களுக்கும் 5,269 தேர்வர்கள் மட்டுமே தேர்வாகி உள்ளன. உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 54,885 தேர்வர்களும் பிஎச்டிக்கு 1,28,179 பேரும் தேர்வாகி உள்ளனர்.

தேர்ச்சி எவ்வளவு?

யுஜிசி நெட் தேர்வின் ஜூன் மாத அமர்வுக்கு 10,19,751 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 4,28,853 பேர் ஆண் மாணவர்கள். 5,90,837 பேர் மாணவிகள் ஆவர். இதில் 7,52,007 பேர் மட்டுமே எழுதினர். குறிப்பாக, 3,05,122 பேர் மாணவர்கள் மற்றும் 4,46,849 பேர் மாணவிகள் தேர்வை எழுதினர்.  ஜூன் மாதத் தேர்வு கணினி மூலம் பல்வேறு ஷிஃப்ட்டுகளில் நடைபெற்றது.

Continues below advertisement

நெட் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

  • மாணவர்கள், அதிகாரப்பூர்வ வலைத்தளமான ugcnet.nta.ac.in-ஐப் பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தில்,"UGC-NET June 2025: Click Here To Download Scorecard" என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
  • "சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் முடிவு திரையில் காட்டப்படும்.
  • எதிர்கால குறிப்புக்காக முடிவைப் பதிவிறக்கி சேமிக்கவும்.

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்த நெட் தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை 85 பாடங்களுக்கும் ஒரே நாளில் ஆன்லைனில் நடத்தப்படுகிறது.

ஜூனில் நடந்த தேர்வு

யுஜிசி நெட் ஜூன் மாத அமர்வுக்கான தேர்வு ஜூன் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 285 நகரங்களில், 10 ஷிஃப்டுகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

முழு விவரங்களுக்கு: https://ugcnet.nta.ac.in/