2023ஆம் ஆண்டுக்கான ஜூன் மாத அமர்வின் யுஜிசி நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று காணலாம். 


இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இள நிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 


இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இள நிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. 


மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. குறிப்பாக ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு நடந்து வருகிறது. 


கொரோனா காலத்தில் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, 2020 டிசம்பர், 2021 ஜூன் தேர்வு ஒரேகட்டமாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 2021, 22ஆம் ஆண்டு டிசம்பர் ஜூன் மாதத் தேர்வுகள் தனித்தனியாக, திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கான தேர்வு, ஜூன் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 


தேர்வுக்கான ஷிஃப்ட் விவரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. 



 


ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?


* தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். 


* அதில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட வெண்டும். 


* உடனே தோன்றும் பக்கத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். 


என்னென்ன கட்டாயம்?


யுஜிசி நெட் தேர்வின்போது ஹால் டிக்கெட் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டியது கட்டாயம் என்று தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) தெரிவித்துள்ளது. 


கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.


தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். தேர்வர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in


கூடுதல்  தகவல்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s301eee509ee2f68dc6014898c309e86bf/uploads/2023/06/2023061036.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


தேர்வர்கள் தங்களின் தேர்வு மையங்கள் குறித்து அறிய: https://examinationservices.nic.in/examsys23/DownloadAdmitCard/frmAuthforCity.aspx?enc=WPJ5WSCVWOMNiXoyyomJgIjOwPzObtlnEsXATN8BLEbd/Ue/hxHbhj5vpCRWkWXy என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.