யுஜிசி தேசிய தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதைப் பெறுவது எப்படி?
யுஜிசி நெட் தேர்வு
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் கட்டாயம்
நெட் நுழைவுத் தேர்வு, இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படும் என்று அண்மையில் யுஜிசி தெரிவித்தது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வு என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி முறையில் நடத்தப்படுகிறது. 2018ஆம் ஆண்டு முதல் கணினி முறையில் இந்தத் தேர்வு ஜூன், டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் நடத்தப்படுகிறது. முந்தைய காலங்களில் பல்வேறு தினங்களுக்கு ஆஃப்லைன் முறையில் தேர்வு நடந்த நிலையில், தற்போது 83 பாடங்களுக்கும் ஒரே நாளில் ஆன்லைனில் நெட் தேர்வு நடக்கிறது.
ஜூன் 18 நெட் தேர்வு
2024ஆம் ஆண்டு ஜூன் மாத அமர்வுக்கான நெட் தேர்வு ஜூன் 18ஆம் தேதி ஓஎம்ஆர் முறையில் நடைபெற உள்ளது. முன்னதாக, ஜூன் 7ஆம் தேதி தேர்வு தேர்வு மைய விவரங்கள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் தற்போது ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஹால் டிக்கெட், அரசு அளித்த செல்லுபடியாகும் புகைப்படத்தோடு கூடிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2 ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
- தேர்வர்கள் https://ugcnet.ntaonline.in/frontend/web/admitcard/index என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்பு குறியீடு (Security Pin) ஆகியவற்றை உள்ளிடவும்.
- சமர்ப்பிப்பித்தால் தேர்வர்களின் ஹால் டிக்கெட் திறக்கும்.
- அதைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு: https://ugcnet.nta.ac.in/