கோவிட்-19 பெருந்தொற்றால் தேசிய தேர்வு முகமை நடத்தும் யுஜிசி-தேசிய தகுதித் தேர்வு (யுஜிசி-நெட்) ஒத்திவிக்கப்படுவதாக் அறிவிக்கப்பட்டுள்ளது. 


2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு மே 2 முதல் நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு www.nta.ac.in என்ற இணைய தளத்தைத் தொடர்ந்து பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்களும் அவர்களது பெற்றோர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பதிவில், " கொரோனா பெருந்தொற்று காலத்தில் தேர்வர்கள் மற்றும் தேர்வு மைய அலுவலர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு யுஜிசி-நெட் டிசம்பர் 2020 தேர்வுகளை ஒத்திவைக்க தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறித்தியுளேன்" என்று தெரிவித்தார். 


 



மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு 


 


இந்தியாவிலுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறுவதற்கானத் தகுதியையும் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. 


2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு வரும் மே மாதம் 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.  


மேலும் விவரங்களுக்கு, 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.