2025ஆம் ஆண்டு யுஜிசி நெட் தேர்வு, டிசம்பர் மாத அமர்வுக்கான தேதிகளை தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
இதன்படி, தேசிய தேர்வு முகமை (NTA) UGC-NET டிசம்பர் 2025 தேர்வை டிசம்பர் 31, 2025 முதல் ஜனவரி 7, 2026 வரை நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், NTA-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ugcnet.nta.nic.in-ல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வு நாடு முழுவதும் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும். தேர்வு நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக தேர்வு மைய நகரம் குறித்த தகவல் சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிப்பதற்கான மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி நவம்பர் 7, 2025 (இரவு 11:50 மணி) ஆகும். இந்த தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். தேர்வு நேரம் 180 நிமிடங்கள் மற்றும் தாள்களுக்கு இடையில் எந்த இடைவேளையும் அனுமதிக்கப்படாது.
UGC NET டிசம்பர் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- அதிகாரப்பூர்வ வலைத்தளமான ugcnet.nta.nic.in ஐப் பார்வையிடவும்.
- "Registration For UGC NET DEC 2025" என்பதைக் கிளிக் செய்யவும்.
- முதல் முறையாக விண்ணப்பிப்பவர்கள் "New Registration" என்பதையும், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் "Login" என்பதையும் கிளிக் செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கட்டணத்தைச் செலுத்தவும்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
தேர்வுக்கான கட்டணம் பொது/ முதுநிலை அல்லாத பிரிவினருக்கு- ரூ. 1,150, பொது- EWS/ OBC-NCL பிரிவினருக்கு ரூ. 600
பட்டியல் சாதி (SC) / பட்டியல் பழங்குடி (ST) / மாற்றுத்திறனாளிகள் (PwD) பிரிவினருக்கு ரூ.325 ஆகும்.
UGC-NET டிசம்பர் தேர்வு தொடர்பான அடுத்தடுத்த தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும் என்று NTA விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
எதற்காக இந்தத் தேர்வு?
யுஜிசி நெட் தேர்வு என்பது இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பதவிகளுக்கான தகுதி மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) ஆகியவற்றைத் தீர்மானிக்க நடத்தப்படும் ஒரு தேசிய அளவிலான தேர்வாகும். இது முனைவர் பட்டப் படிப்புகளில் சேருவதற்கும், பல்வேறு அமைச்சகங்களின் உதவித்தொகைகளுக்கும் ஒரு தகுதித் தேர்வாகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.