யுஜிசி தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம். அதேபோல கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்தும் அறியலாம்.


இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அதேபோல இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகையைப் (Junior Research Fellowship- JRF) நெட் தேர்வு கட்டாயம் ஆகும். மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி மூலம் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது.


2023ஆம் ஆண்டு ஜூன் மாத அமர்வுக்கான உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. தேசிய தகுதித் தேர்வு ஜூன் 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.


டிசம்பர் மாத அமர்வு முடிவுகள் வெளியீடு


இதற்கிடையே 2023ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத அமர்வுக்கான யுஜிசி தேசியத் தகுதித் தேர்வு, நாடு முழுவதும் 292 நகரங்களில் டிசம்பர் 6 முதல் 19ஆம் தேதி வரை, மொத்தம் 8 நாட்களுக்கு நடைபெற்றது. 9,45,872 தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், 6,95,928 பேர் தேர்வை எழுதினர்.


இதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து சில நாட்களாகத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியாகின.


தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?


* யுஜிசி தேசியத் தகுதித் தேர்வு முடிவுகளை https://ugcnet.ntaonline.in/frontend/web/scorecard/index என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


* இந்த இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.


* சப்மிட் பொத்தானை அழுத்தி, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


கட்- ஆஃப் மதிப்பெண்களை அறிந்துகொள்வது எப்படி?


தேர்வர்களின் சமூகத்தைப் பொறுத்து, கட் – ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வழங்கப்படுகின்றது.


இந்த நிலையில், https://ugcnet.nta.ac.in/images/CUTOFF.pdf  என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வர்கள் தங்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம். இதில் பாட வாரியாக, ஒவ்வொரு சமூகத்துக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள  உதவிப் பேராசிரியர் பணி மற்றும் உதவித் தொகைக்கான தேதிய தகுதித் தேர்வு கட் – ஆஃப் மதிப்பெண்கள் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.


கூடுதல் தகவல்களுக்கு: https://ugcnet.nta.ac.in/ அல்லது https://www.nta.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


இதையும் வாசிக்கலாம்: வேறு பெயரில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலங்கள்: தமிழ்நாட்டைக் குறிப்பிட்டாரா மத்திய அமைச்சர்?