யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், தேர்வர்கள் மே 7ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வு ஜூன் 21 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

நெட் தேர்வு

மத்திய, மாநில அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்ற ’UGC-National Eligibility Test (NET)' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) இந்தத் தேர்வின் அடிப்படையில் வழங்கப்படும்.

இதற்கு நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது.  குறிப்பாக ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் கணினி வழியில் நடத்தப்படும். 

Continues below advertisement

இந்த நிலையில் டிசம்பர் மாத அமர்வுக்கான தேர்வு ஜனவரி மாதம் நடைபெற்றது. தொடர்ந்து 2025 ஜூன் மாத அமர்வுக்கான தேர்வு ஜூன் மாதத்திலேயே நடைபெற உள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி? ( HOW TO APPLY ONLINE FOR UGC NET 2025)

  • தேர்வர்கள் ugcnet.nta.ac.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.
  • UGC NET June 2025 registration link என்ற இணைப்பைச் சொடுக்கவும்.
  • முன்பதிவு மற்றும் லாகின்னை முறையாக மேற்கொள்ளவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் உள்ள தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்யவும்.
  • ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி அமர்ப்பிக்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தை சேமித்து வைத்துக்கொள்ளவும்.  

மே 8ஆம் தேதி நள்ளிரவு வரை நெட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். அதேபோல மே 9 முதல் 10ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

யுஜிசி நெட் தேர்வு ஜூன் 21 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.