யுஜிசி 2025ஆம் ஆண்டு தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஜூன் மாத அமர்வு தேர்வுகள் ஜூன் 25ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை என்டிஏ வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்த நெட் தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை 85 பாடங்களுக்கும் ஒரே நாளில் ஆன்லைனில் நடத்தப்படுகிறது.

தேர்வு எப்போது?

யுஜிசி நெட் ஜூன் மாத அமர்வுக்கான தேர்வு ஜூன் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 85 பாடங்களுக்கு, கணினி வழியில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. அண்மையில் யுஜிசி தேசிய தகுதித் தேர்வு மையங்களின் விவரங்களை என்டிஏ வெளியிட்டது. இந்த நிலையில், நெட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று (ஜூன் 22) வெளியாகி உள்ளது.

Continues below advertisement

அனுமதிச் சீட்டில் என்ன இருக்கும்?

நுழைவுச் சீட்டில் தனிப்பட்ட விவரங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடம், பதிவு எண், தேர்வு மையம், தேர்வு நேரங்கள் மற்றும் தேர்வு நாள் வழிகாட்டுதல்கள் ஆகியவை இருக்கும். விண்ணப்பதாரர்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் கவனமாகப் படித்து பின்பற்ற வேண்டும்.

நுழைவுச் சீட்டுகள் தபால் மூலம் அனுப்பப்படாது, மேலும் தேர்வு மையத்தில் நகல் நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படாது. எனவே வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

பெறுவது எப்படி?

  • தேர்வர்கள் nta.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
  • அல்லது https://ugcnetjun2025.ntaonline.in/admitcard/index என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில், விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்பு குறியீட்டு எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
  • உடனே ஹால் டிக்கெட் உங்கள் திரையில் தோன்றும்.

ஹால் டிக்கெட் குறித்த கூடுதல் விவரங்களை https://ugcnetjun2025.ntaonline.in/admitcard/index என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். 

யுஜிசி நெட் தேர்வு குறித்த முழு அறிவிக்கையைக் காண https://ugcnet.nta.ac.in/images/public-notice-for-admit-card-of-ugc-net-june-2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம். 

தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்குhttps://ugcnet.nta.ac.in/