உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. தேசிய தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (மே 31) கடைசித் தேதி ஆகும்.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) ஒரேகட்டமாக நடத்தப்பட்டது. 2021 டிசம்பர் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெற்றன. இதற்கிடையே 2022 ஜூன் தேர்வுகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற்றன. அதேபோல 2022 டிசம்பர் தேர்வுகள் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் மார்ச் 16ஆம் தேதி வரை நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து 2023 ஜூன் மாத உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. தேசிய தகுதித் தேர்வு ஜூன் 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்குத் தேர்வர்கள் மே 10 முதல் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு விண்ணப்பிக்க நாளை (மே 31) கடைசித் தேதி ஆகும்.
விண்ணப்பக் கட்டணத்தை ஜூன் 1ஆம் தேதி இரவு 11.50 மணி வரை செலுத்தலாம். விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜூன் 2, 3ஆம் தேதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினருக்கு - ரூ.1,150
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்/ ஓபிசி (க்ரீமி லேயர் அல்லோதோர்) - ரூ.600
எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளி/ மூன்றாம் பாலினத்தவர் - ரூ.325
கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
தேர்வர்கள் இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in
தேர்வர்கள் https://examinationservices.nic.in/examsys23/root/home.aspx?enc=ZyneP5el4KUXQgkDVi0LLc6WT8v00hpzZr+i7oKjaXDUBfGjXOjEnaJ2aS6ebofZ என்ற முகவரியை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோரும் அதே இணைப்பில் New Registration பகுதியை க்ளிக் செய்ய வேண்டும்.
https://cdnbbsr.s3waas.gov.in/s301eee509ee2f68dc6014898c309e86bf/uploads/2023/05/2023051094.pdf என்ற முகவரியை க்ளிக் செய்து, தேர்வு குறித்த அறிவிக்கையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.