இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மூலம் நடத்தப்படும் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வேளாண் ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள், நிகர் நிலை பல்கலைக்கழங்கள், தேசிய ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்துக்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்- INDIAN COUNCIL OF AGRICULTURAL RESEARCH) தலைமை அமைப்பாக உள்ளது. மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி பெற்ற அமைப்பு இது. இதன் தலைவராக மத்திய வேளாண் துறை அமைச்சர் செயல்பட்டு வருகிறார்.
கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் தோட்டக் கலை, மீன்வளம், பால் வளம் மற்றும் விலங்கியல் துறைகள் செயல்படுகின்றன. இந்த நிலையில் 2023- 24ஆம் கல்வி ஆண்டு படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு செப்.13ஆம் தேதி தொடங்கியது.
இதில் 2021ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இதற்கிடையே வேளாண் கல்லூரிகளில் சேர இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு செய்யுமாறு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டதால் ஐசிஏஆர் கேட்கும் கேள்விக்கு மாணவர்கள் பதில் அளிக்க முடியவில்லை. இதனால் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தீர்வு என்ன?
இந்த நிலையில் கடந்த ஆண்டுகளைப் போல, 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு செய்வதில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
முன்னதாக, ஐசிஏஆர் இளநிலை படிப்புகளுக்கான தேர்வு பொது நுழைவுத் தேர்வு மூலம் (க்யூட் தேர்வு) நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில், தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு: https://icaradmission.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
தொலைபேசி எண்கள்: 011-40759000/ 011- 6922770
இ- மெயில் முகவரி: icar@nta.ac.in
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் நடத்தப்பட்டு வரும் இளங்கலைப் படிப்புகளுக்கு தேர்வர்கள் https://icar.ucanapply.com/univer/public/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பின்கீழ் விண்ணப்பித்து வந்தனர். இதில், 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் குறித்து ஐசிஏஆர் கேட்கும் கேள்விக்கு மாணவர்கள் பதில் அளிக்க முடியவில்லை. இதனால் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாம்: அடிப்படை ஊதிய முரணை நீக்கும் வரையில் காலவரையற்ற உண்ணாவிரதம்: இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் அறிவிப்பு