சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை விரைவாக நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கடிதம் எழுதி உள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு நடத்துவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. அதில் ஜனவரி மாதம் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையிலும் இதுகுறித்த முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

  1. நிர்வாகப் பணியிடமாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதை கருத்தில் கொண்டும், பதவி உயர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணி ஓய்வு பெறும் சூழலை கருத்தில் கொண்டும், மாணவர்கள் நலன் கருதியும்சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்தலில் விரைந்து நடத்திட நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம். தேர்வு நடத்துவதற்கு முன்பாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவினை வெளியிட வேண்டும்.

குறைந்தபட்ச மதிப்பெண்களில் மாற்றம்

Continues below advertisement

  1. பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தகுதித் தேர்வு எழுதும் அனைவருக்கும் தங்கள் பணி வாய்ப்புக்கும் பணியில் தொடரவும் தகுதித் தேர்வு மதிப்பெண்களை 50% ஆக குறைத்திட நடவடிக்கை எடுக்க பணிவுடன் வேண்டுகின்றோம் தகுதி தேர்வு தகுதித் தேர்வுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே எங்களது அமைப்பின் சார்பில் மனு வழங்கியுள்ளோம் அதனை நவம்பர் 15,16 2025-ல் நடைபெற்ற தேர்வு முதல் அமல்படுத்த வேண்டும்
  2. பாடத்திட்டத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக பணியில் உள்ள ஆசிரியர்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்கள் பாடத்தில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி வினாத்தாள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்
  3. சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துகிற போது ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் தளர்வுவழங்கிட வேண்டும்.
  4. சிறப்பு தகுதி தேர்வு வாய்ப்பினை தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.
  5. பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பணியாற்றி வரும் ஆய்வக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோரில் உரிய கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு அவர்களும் பள்ளிக் கல்வித் துறையின் ஒரு அங்கம் என்பதால் சிறப்பு தகுதி தேர்வு எழுதும் வாய்ப்பினை வழங்க வேண்டும்.
  6. இரட்டை பட்டம் பெற்றவர்கள், பட்டப்படிப்பில் 45 சதவீதத்திற்கும் குறைவாக பெற்றவர்கள் ஆகியோருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் தாள் ஒன்று, தாள் இரண்டு ஆகிய இரண்டையும் எழுதிடும் வகையில் திருத்தங்கள் வெளியிட வேண்டும்.
  7. கேரளா அரசு விதிவிலக்கு அளித்தது போல NET/ SET/ M.Phil/ Phd முடித்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
  8. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு TET தேர்வு தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
  9. மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு ஆந்திரா/ தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது போல தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து வழங்கிட வேண்டும் என்று அமைச்சருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.