2022ம் ஆண்டுக்கான ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் 2-ன் உத்தேச விடைக் குறிப்புகளை ஆசிரியர்‌ தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம். 


இதுகுறித்து ஆசிரியர்‌ தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


''தமிழ்நாடு ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு 2022ம்‌ ஆண்டிற்கான ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ அறிவிக்கைபடி ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் 2-ற்கான கணினி வழித் தேர்வு (Computer Based Examination) 03.02.2023 முதல்‌ 15.02.2023 வரை காலை,மாலை இரு வேளைகளில்‌ நடத்தப்பட்டது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள்‌ (Tentative Answer Key) ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளமான https://trb.tn.nic.in/ என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.


தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வு எழுதிய தேதியில்‌ எந்த அமர்வில்‌ தேர்வு எழுதினார்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Question Paper TRB website-ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள்‌ வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணைய வழியில்‌ ஆட்சேபனை தெரிவிக்கும்‌ போது உரிய வழிமுறைகளை தவறாமல்‌ பின்பத்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும்‌. சான்றாவணங்கள்‌ இணைக்கப்படாத முறையீடுகள்‌ பரிசீலனைக்கு ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது. இவை அனைத்தும்‌ முற்றிலுமாக நிராகரிக்கப்படும்‌.


ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின்‌ மீது தேர்வர்கள்‌ ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர்‌ 22.02.2023 பிற்பகல்‌ முதல்‌ 25.02.2023 பிற்பகல்‌ 05.30 மணி வரை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதள முகவரியில்‌ மட்டுமே ஆதாரங்களுடன்‌ பதிவு செய்திடல்‌ வேண்டும்‌. 


அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தக (Standard Text Books) ஆதாரம்‌ மட்டுமே அளிக்க வேண்டும்‌. கையேடுகள்‌ (Guides, Notes) ஆதாரங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தபால்‌ அல்லது பிற வழி முறையீடுகள்‌ ஏற்கப்பட மாட்டாது, அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும்‌. மேலும்‌, பாட வல்லுநர்களின்‌ முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது''.


இவ்வாறு ஆசிரியர்‌ தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 


தேதி வாரியாக உத்தேச விடைக் குறிப்புகளைக் காண https://trb.tn.nic.in/TET_2022/22022023/msg%20TK.htm என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


விடைக் குறிப்பை ஆட்சேபிப்பது எப்படி?


* இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்


* விண்ணப்பதாரரின் பதிவு எண்ணை உள்ளிடவும்


* விண்ணப்பதாரரின் பிறந்த தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.


* தேர்வு தேதியைத் தேர்ந்தெடுக்கவும்


* திட்டமிடப்பட்ட தொகுப்பைத்  (Scheduled Batch) தேர்ந்தெடுக்கவும்


* திரையில் காட்டப்படும் கேப்ட்சாவை உள்ளிடவும்


* OT பதிவு படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பதாரரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்


* வெற்றிகரமான OTP சரிபார்ப்புக்குப் பிறகு, வழிமுறைகளைப் படித்து, அறிவிப்பை ஏற்கவும்


* முதன்மை வினாத்தாளைப் பார்க்க - “Click here to view Master Question Paper" என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்


* கொடுக்கப்பட்ட பகுதிகளில் ஆட்சேபணையைக் குறிப்பிடவும்


*  ஆட்சேபனைக்குத் தேவையான துணை ஆவணத்தைப் பதிவேற்றி, சமர்ப்பிக்கவும்.


10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.